Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Iran

மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், அமெரிக்க ராணுவத்திற்குத் தங்களது மண்ணில் இடமளித்துள்ள அண்டை நாடுகளுக்கு ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களுக்குத் தங்களது நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள், உடனடியாகத் தங்களது நாட்டில் குடிமைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஈரான் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு இணையான பதிலடி – ஈரான் மிரட்டல்
இதுகுறித்து ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளைத் தங்கள் மண்ணில் அனுமதிக்கும் நாடுகள், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்குத் தங்களது நிலப்பரப்பைத் தாராளமாக வழங்கும் நாடுகள், அமெரிக்கா சந்திக்கப் போகும் அதே அளவிலான கடுமையான பதிலடியைத் தங்களும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்று ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளது.

குவைத் மீது தாக்குதல்
ஈரானின் இந்த எச்சரிக்கை வெறும் வார்த்தைகளாக மட்டுமல்லாமல், சனிக்கிழமை காலையிலேயே செயலாகவும் வெடித்துள்ளது. குவைத்தில் உள்ள ஒரு முக்கிய மின்சாரம், நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் புரட்சிகரக் காவலர் படை அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதையும் படியுங்க  52 வயதில் மீண்டும் மணமகளான இம்ரான் கானின் முன்னாள் மனைவி..! ரூ.1000 கோடி அதிபருடன் 2 வது திருமணம்..!

இந்தக் கொடூரத் தாக்குதலால் குவைத் நாட்டின் மிக முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

24 மணி நேரத்தில் 2-வது தாக்குதல்
ஈரானின் இந்த ஏவுகணை/ட்ரோன் தாக்குதலால் மின் உற்பத்தி நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அங்கிருந்த முக்கிய இயந்திரப் பாகங்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்திற்குள் குவைத்தின் இரண்டு முக்கிய மின்சாரம், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஈரானால் குறிவைக்கப்பட்டுத் தகர்க்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த சேதங்கள், பாதிப்புகள் குறித்து குவைத் நாட்டு அதிகாரிகள் தற்போது தீவிரமாக மதிப்பீடு செய்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் அணுசக்தி மையங்களைத் தாக்கத் திட்டமிட்டு வரும் வேளையில், அதற்குப் பகிரங்கமாகத் துணை நிற்கும் ஜோர்டான், கத்தார், பஹ்ரைன், குவைத் போன்ற அரபு நாடுகளின் உள்கட்டமைப்புகளை முதலில் காலி செய்யும் வியூகத்தில் ஈரான் களமிறங்கியுள்ளது மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  Go For Western Economy With These Pioneering

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago