Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக போதைப்பொருள் மற்றும் 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரு சம்பவங்களிலும் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாங்காக் மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து சென்னை வரும் விமானப் பயணிகளை சுங்கத்துறை மற்றும் ஏர் இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்த நிலையில், பாங்காக்கில் இருந்து வந்த தனியார் விமானத்தில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த சுமார் 21 வயதுடைய இளைஞர் ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தின.

இதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளுக்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது பார்சல்களில் இருந்து 6 கிலோ எடை கொண்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

சர்வதேச கறுப்புச் சந்தையில் இதன் மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தல் பின்னணியில் உள்ள தொடர்புகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க  திருச்சியில் தவறான சிகிச்சை அதிர்ச்சி – நர்சிங் மாணவி உயிரிழப்பு, மருத்துவமனை முன்பு போராட்டம்

இதற்கிடையில், பாங்காக்கில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில், பசை வடிவில் கடத்தி வரப்பட்ட 414 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தத் தங்கத்தை விமான நிலையத்திற்கு வெளியே கடத்திச் செல்ல முயன்ற கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவரும், அவருக்கு உதவியாகச் செயல்பட்ட விமான நிலைய ஊழியர் ஒருவரும் அதிகாரிகளிடம் சிக்கினர்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய விசாரணையில், இருவரும் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து சென்னை வரும் விமானங்கள் மூலம் போதைப்பொருட்கள் மற்றும் தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சுங்கத்துறை மற்றும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு தனித்தனி கடத்தல் சம்பவங்களும் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படியுங்க  #BREAKING யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... காவிரியில் தண்ணீர் திறந்தது கர்நாடகா...!!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago