Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மக்கள் மேடை என்னும் தனி இயக்கம் தொடங்கியுள்ளார் லதா ரஜினி காந்த். ஏற்கெனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகக் கூறி பின் வாங்கிவிட்ட நிலையில் லதா ரஜினி காந்த் ஆரம்பித்துள்ள மக்கள் மேடை இயக்கம் குறித்து சமூக வலைதளங்களில் கடைமையா ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து நெட்டிசன் ஒருவர், ”அண்ணாமலை இயக்கத்தில் சேரலாமா? இல்ல லதா ரஜினி காந்த் இயக்கத்துல சேரலாமா? ஆழ்ந்த யோசனையில்… நீங்க ப்ரெண்ட்ஸ்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

”லதா ரஜினி பள்ளியில் பத்து வருடம் முன்பு பிள்ளையை சேர்க்க முற்பட்டபோது தந்தை ₹1000 வாங்கிகொண்டு அட்மிஷன் செய்ய கட்டாயம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். தந்தை இல்லை என்று தெரிவித்தும் அது அவர்கள் பாலிசியாம். தமிழர்களுக்காக எச்சை கையில் காக்க விரட்டாத கூட்டம் இவர்கள்! விஜய் வரவு பல இயக்கங்கள் உருவாக காரணமாயிருக்கு போல (லதா ரஜினி, அண்ணா மலை) இன்னும் எத்தனை வரப்போகுதோ, அண்ணாமலை நோக்கம் கட்சி அப்பறம் ஆட்சி லதா ரஜினி நோக்கம் ஒரு வேலை மய்யம் மா யோசிப்பாங்களோ ? வடக்க இருந்து கழகங்களுக்கு சுத்து போடுறாங்களோ (doubt) முக்கியமா திமுக-வுக்கு” என கலாய்த்துள்ளார்.

இதையும் படியுங்க  மரண வெயிட்டிங்..! விஜய் ரசிகர்களால் நடுங்கும் ரஜினி..? பார்த்து பார்த்து செதுக்கும் நெல்சன்..!

மற்றொரு நெட்டிசனோ, ”அவர் விருப்பப்பட்டு ஆரம்பித்திருக்க மாட்டார். ஆசிரமம் பள்ளி கட்டணத்தில் பிரச்சனை வந்த பொழுது கூட ரஜினிகாந்த் மிகவும் வருத்தப்பட்டார். லதா ரஜினிகாந்தின் இந்த அமைப்பில் ஏதேனும் சிறு தவறு நடந்தாலும் ரஜினியை தான் கேலி செய்வார்கள். சிஸ்டம் அப்படி” என்று எச்சரித்துள்ளார்.

”படையப்பா (1999) ரிலீஸ் அப்போ சிறுநிறுவனங்கள் அனுமதி பெறாம ரஜினி படம் போட்ட பனியன் விற்க தடை வாங்கினார் லதா ரஜினிகாந்த். இதை ஏன் சொல்றேன்னா.. இந்த குடும்பத்துக்கு எல்லாமே பிசினஸ். சமூகம் அக்கறை இல்ல. அதனால்தான் ஒரு மானஸ்தன் அங்கிருந்து ஓடிட்டான்” என கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  விஜய்க்கு எதிராகத் திரும்பும் 10 தவெக எம்.எல்.ஏ-க்கள்? பின்னணியில் அந்த' புள்ளி..! உலுக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்!

”இந்திய ஜனநாயகத்தில் யாரும் ஒரு இயக்கமோ, கட்சியோ தொடங்கலாம். அந்த உரிமையை நாம் மதிக்க வேண்டும். எனவே திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் முயற்சியையே எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தற்போதைக்கு அவர் ஒரு கல்வியாளர் என்ற அடையாளத்தில்தான் அதிகம் அறியப்படுகிறார்; பெரிய சமூக அல்லது அரசியல் இயக்கத் தலைவராக அல்ல.

ரஜினியின் கருத்துகளுக்கு இன்னும் மரியாதை இருக்கலாம். ஆனால் தனியாக தேர்தல் முடிவுகளை மாற்றும் அளவிலான வாக்கு வங்கி இன்று இருக்கிறதா என்பது வேறு கேள்வி? 1996 வெற்றியை முழுமையாக ரஜினிக்கே கொடுக்க முடியாது; அப்போது இருந்த ஆட்சிக்கு எதிரான மனநிலையும் மிகப் பெரிய காரணம்.

இதையும் படியுங்க  விஜய் அலையில் சிக்கிய சூப்பர்ஸ்டார்..! தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ரஜினி..!?

அதற்குப் பிறகு பல தேர்தல்களில் ரஜினி தனது விருப்பங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிவித்திருந்தாலும், அதன் தாக்கம் பெரிதாக வாக்குகளாக மாறியதாக தெரியவில்லை. எனவே தவெக-க்கு கவலைப்பட வேண்டியது லதா ரஜினிகாந்த் அல்ல. மக்கள் மத்தியில் தங்களின் செயல்பாடு, ஆட்சி மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முக்கியம்” என ஆதரவாகவும், எதிராகவும் விவாதித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago