https://republictn.com/

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றி கழகத்தில் (TVK) இணைந்ததை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி முழுவதும், மரகதம் குமரவேல் அவர்களுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரகதம் குமரவேல். அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் வேலுமணி அணி என பிரிவுகள் உருவான நிலையில், அவர் வேலுமணி அணிக்கு ஆதரவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, திடீரென தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

இதையடுத்து, மதுராந்தகம் தொகுதி முழுவதும் அதிமுக சார்பில் போராட்டங்கள், போஸ்டர் கிழிப்பு, பேனர் கிழிப்பு, போஸ்டர் எரிப்பு உள்ளிட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன.

இந்நிலையில், தற்போது தொகுதி முழுவதும் அவருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago