Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கருத்துகளை எதிர்கொள்ள முடியாமல் பழிவாங்கும் நடவடிக்கையில் தவெக அரசு ஈடுபடுவதாக நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விமர்சித்துள்ளார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதற்காக நெல்லையைச் சேர்ந்த மென்பொறியாளர் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கருத்து சுதந்திரத்தை ஒடுக்கி, விமர்சனங்களை ஏற்க முடியாத அரசாக தவெக செயல்படுவதாகவும், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேபோல், பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்து அவர் ஆவேசமாக கருத்து பதிவிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தை குறிப்பிட்டு, பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் விமர்சித்திருந்தார். இதற்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுவதால், இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்க  "அரசு கொடுத்த தங்கம்.. 1 பைசா செய்கூலி!  தமிழக வரலாற்றிலேயே முதல்முறை! கார்ப்பரேட் உலகின் 'Loss-Leader' கேம்!"
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago