Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நான் யுனேஸ்வரன் ராமராஜ், மலேசியாவின் ஒற்றுமைத்துறை துணை அமைச்சர்.

பதவி ஏற்ற பிறகு, இது என்னுடைய முதல் இந்திய பயணம். குறிப்பாக, எடிசன் விருதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் எனக்கு அழைப்பு வழங்கப்பட்டிருந்தது. அதில் பங்கேற்பதற்காகவே இங்கு வந்துள்ளேன்.

மேலும், மலேசியா – இந்தியா உறவு இன்னும் வலுப்பெற வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கம். குறிப்பாக தமிழ்நாட்டுடன் மலேசியாவுக்கு மிகவும் நெருக்கமான உறவு உள்ளது.

ஏனெனில், இன்று மலேசியாவில் வாழும் பெரும்பாலான மக்கள் தென்னிந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்களே. அதனால் இந்த உறவுப் பாலம் தொடர்ந்து வலுவாக நீடிக்க வேண்டும் என்பதற்காகவும், பிரதமரின் சார்பாகவும் இங்கு வந்துள்ளோம்.

அதுமட்டுமல்லாமல், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் இங்கு வாழும் மலேசிய வம்சாவளியினரையும், மலேசிய தொழிலதிபர்களையும், சில அரசியல் தலைவர்களையும் சந்திக்கும் திட்டமும் உள்ளது. இந்த பயணத்தின் முழு நோக்கமே இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகும்.

இதற்கு முன்பும் பல தொழில் மற்றும் வர்த்தக தொடர்பான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற சூழ்நிலையால் மலேசியா பல்வேறு பொருளாதார மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வணிகத் துறையில் புதிய அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையும் படியுங்க  "அமெரிக்காவுக்குப் பதிலடி உறுதி! போர்க்களத்தில் கர்ஜிக்கும் ஈரானின் புரட்சிப்படை!"

தென் ஆசிய நாடுகளில் மலேசியா தற்போது ஒரு வலுவான பொருளாதார மையமாக திகழ்கிறது. அந்த அடிப்படையில், தமிழ்நாட்டுடன் வணிக மற்றும் முதலீட்டு தொடர்புகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மலேசிய அரசு தொடர்ந்து பரிசீலித்து வருகிறது.

மேலும், தமிழக முதல்வர் திரு. சி. ஜோசப் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மலேசிய பிரதமரும் அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் ஆடியோ வெளியிட்டபோது மலேசிய மக்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மலேசியாவில் வாழும் தமிழர்களும் அவருக்கு மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் அவருக்கு வாக்களித்துள்ளனர். இது மாற்றத்திற்கான வாக்காக பார்க்கப்படுகிறது. மக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் இந்த ஆட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். எனவே இது மிகப்பெரிய பொறுப்பும் எதிர்பார்ப்பும் கொண்ட அரசாக இருக்கும். அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இதையும் படியுங்க  "5 மாதங்களாகத் தலைமறைவு.. தாக்குதலில் முகம் சிதைந்ததா? ஈரான் உச்ச தலைவரின் உடல்நிலை குறித்துப் பரவும் ரகசியங்கள்!"

பின்னர், மலேசியாவில் போதைப்பொருள் தடுப்பு சட்டங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அது தொடர்பான முழு விவரங்களை சுங்கத்துறை அதிகாரிகளே விளக்க வேண்டும்.

எனக்கு அதுகுறித்த விரிவான தகவல்கள் இல்லை. ஆனால் மலேசிய அரசு, சுங்கத்துறை மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள் அனைத்து விஷயங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு யாரும் துணை போக மாட்டார்கள். மலேசிய அரசு சார்பில் தேவையான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago