விஜய் அரசியலுக்கு வந்ததைவிட தனுஷ் தனது அடித்தளத்தை பக்காவாக போட்டுவிட்டு களத்துக்கு வருகிறார் என அரசியல் விவகாரங்களை தெரிந்தவர்கள் தனுசுக்கு சர்டிபிகேட் கொடுக்கிற அளவுக்கு அவரது செயல்பாடுகள் வேகம் எடுத்து இருக்கிறது.
தமிழக மக்களுடைய ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்ய முயற்சிப்பது போல் தனுஷுடைய ஆரம்ப அரசியல் வடிவமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக நடுத்தர ஏழை மாணவ- மாணவிகளுக்கு டியூஷன் சென்டர்களை திறக்க ஏற்பாடு செய்து வருகிற தனுஷ் அடுத்ததாக தன் மன்றத்தின் மூலமாக வழக்கறிஞர் பிரிவு உருவாக்கப் போகிறாராம்.
ஒவ்வொரு தொகுதிக்கும் சீனியர்கள், ஜூனியர்கள் என ஒரு அட்வகேட் டீமை தயார் செய்து இருக்கிறாராம். இவர்களுடைய வேலை என்னவென்றால் வழக்குகளில் சிக்கி இருக்கிற ஏழை எளியவர்களுக்கு சட்ட உதவி கொடுக்கிற மாதிரியும், முக்கியமான வழக்குகளை ஏற்று நடத்துற மாதிரியும் இந்த பிரிவு செயல்பட போகிறது.
அன்றாடம் காவல்துறையில சாமானியர்கள் சந்திக்கிற பிரச்சனைகளுக்கும் தனுஷின் உதவி செய்ய உள்ளார். இன்னொரு பக்கம் அரசியலிலும், சமூகப் பணிகளிலும் உள்ள அனுபவஸ்தர்கள் பலர் தனுஷ் டீமுக்கு ஆலோசனை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதுதில் சமீபத்தில் சென்னையில் இருக்கிற ஒரு பிரபலமான தியேட்டர் அதிபர் ஒருவர் தனுஷின் ஆலோசகராக மாறி இருக்ம்கிறாராம். டியூசன் சென்டர்கள் இவருடைய ஐடியா தான் என்கிறார்கள்.
