டிராய் கொண்டுவந்துள்ள புதிய விதிகளால், இனி உங்கள் போன் கால் அனுபவம் முற்றிலும் மாறப் போகிறது. 2G, 3G காலம் மலையேறுகிறது.முழுவதுமாக ஐபி மயமாகிறது. இதுவரை ஏர்டெல், ஜியோ, விஐ மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் பழைய E1 அல்லது TDM தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி வந்தன. இனி இவை முற்றிலுமாகத் தூக்கி எறியப்பட்டு, முழுமையான ஐபி அடிப்படையிலான நெட்வொர்க்காக மாற்றப்படுகிறது.
இந்த மாற்றம் ஜனவரி 1, 2027 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. அன்றிலிருந்து விற்கப்படும் அத்தனை புதிய இணைப்புகளும் ஐபி நெட்வொர்க் மூலமாக மட்டுமே இயங்கும்.
இதுவரை பல கட்டங்களாக இருந்த போக்குவரத்துப் பரிமாற்றம், இனி உரிமம் பெற்ற சேவைப் பகுதி அளவுக்கு மாற்றப்படுகிறது.
இதனால் ஃபோன் கால் செய்தவுடன் மறுமுனையில் கனெக்ட் ஆகிவிடும் பின்னணி இரைச்சல் குறைந்து, எதிரே பேசுபவரின் குரல் மிகத் தெளிவாகவும் இயல்பாகவும் கேட்கும். கால் கட் ஆகுற தொல்லைகள் பெரிதும் குறையும்.
பல சிறிய இடை இணைப்புகளைப் பராமரித்து வந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, இனி அந்தச் செலவு மிச்சமாகும். இதனால் நெட்வொர்க் செயல்பாட்டுச் செலவுகள் குறைந்து, நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களைச் சீராக வைத்திருக்கவும், சேவையை மேம்படுத்தவும் இது உதவும்.
உங்கள் பகுதியில் எந்த கம்பெனி நெட்வொர்க் என்ன வேகத்தில் வேலை செய்கிறது என்பதை நீங்களே செக் செய்ய ‘Network Experience’ தளத்தை டிராய் அறிமுகப்படுத்தியுள்ளது.
நவம்பர் 1, 2026 முதல் புதிய விதி: இனி உங்களுக்கு யார் போன் செய்தாலும், அவர்களின் KYC பதிவு செய்யப்பட்ட உண்மையான பெயர் உங்கள் மொபைல் திரையில் தெளிவாகக் காட்டும். ஸ்பேம் கால்களையும், ஏமாற்றுக்காரர்களையும் இனி எளிதில் கண்டுபிடிக்கலாம்!
சுருக்கமாகச் சொன்னால், 2027 முதல் இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறை அதிவேக டிஜிட்டல் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. இனி உங்களுக்கும் உங்களுக்கும் இடையேயான குரல் பரிமாற்றம் படு சுத்தமாக இருக்கப் போகிறது.
