Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay

தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும், தலைமைச் செயலக வட்டாரத்தில் இப்போது ஒரே பேச்சுதான் அடுத்த தலைமைச் செயலாளர் யார்?

சொந்தக் கட்சி நிர்வாகிகளின் நெருக்கடி, கூட்டணித் தலைவர்களின் கோரிக்கைகள், வெளி சக்திகளின் தலையீடுகள் என அனைத்தையும் தாண்டி ஆட்சியைத் தடையின்றி நடத்துவதில் தலைமைச் செயலாளரின் பங்கு மிக முக்கியமானது. அந்த வகையில், தற்போதைய தலைமைச் செயலாளர் சாய்குமாரின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தலைமைச் செயலக மேலிடத்தில் ஒரு பெரிய அதிகாரப் போர் நடந்து வருகிறது.

சாய்குமாரின் சேஃப் ஜோன்
முதலமைச்சருக்கு மிகவும் நம்பிக்கையான அதிகாரியாக விளங்கும் சாய்குமார், ஆட்சியின் முக்கியமான முடிவுகளில் முதலமைச்சருக்குத் தற்காப்புக் கவசமாகவே செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக, முதல்வரை அணுகித் தங்களுக்கான சுயநலக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளத் துடிக்கும் சில வெளி சக்திகளுக்கு சாய்குமார் கடுமையான கடிவாளம் போட்டு வைத்துள்ளார். எந்தவொரு கோப்பும் சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் எந்தப் புகாருக்கும் இடமளிக்காத வகையில் ‘சேஃப் ஜோன்’-இல் இருப்பதை அவர் உறுதி செய்வதால், அந்த வெளி அதிகார மையங்களால் நினைத்ததைச் சாதிக்க முடியாமல் போயுள்ளது.

இதையும் படியுங்க  ஒரே கல்லில் இரண்டு மாங்காய்… டெல்லியில் காய் நகர்த்தும் முதல்வர் விஜய்..! தவெகவின் முதல் எம்.பி., யார்..?

இதன் காரணமாகவே, முதலமைச்சர் சாய்குமாரின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிக்க விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால், அவர் அங்கிருந்தால் தங்களின் கை ஓங்காது என்பதை உணர்ந்த அந்த நிழல் அதிகாரம் செலுத்தும் கேம்ப், சாய்குமாரை எப்படியாவது அந்த நாற்காலியில் இருந்து நகர்த்திவிடத் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது.

Republic Tamil

முன்னணியில் யார்?
சாய்குமாருக்குப் பிறகு அந்த உச்சகட்டப் பதவிக்கு வரப்போவது யார் என்ற பட்டியலில் மூன்று மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.

தற்போது தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னணியில் இருப்பது விஜயகுமார்தான் என்று கோட்டை வட்டாரங்கள் உறுதியாகச் சொல்கின்றன. தொழில்துறையில் பல முதலீடுகளை ஈர்த்து திறம்படச் செயல்பட்டு வரும் இவருக்கு தலைமைச் செயலகத்தின் மூலை முடுக்குகள் அனைத்தும் அத்தனை அக்குவேறாகத் தெரியும். நிர்வாகத்தைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடியவர் என்பதால் மேலிடத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நீண்டகால நிர்வாக அனுபவமும், பல்வேறு துறைகளில் திறம்படச் செயல்பட்ட அனுபவமும் கொண்ட ராஜேஷ் லக்கானியின் பெயரும் இந்த முக்கியமான ரேஸில் பலமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க  காங்கிரஸ் விழாவுக்கு அழைப்பு… நிகாரித்த விஜய்..! தடுத்த பழைய சம்பவங்கள்..!?

மாநிலத்தின் நிதிநிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதில் மிக முக்கியப் பங்காற்றும் நிதித்துறைச் செயலாளர் சித்திக், எந்த ஒரு சிக்கலையும் சாதுரியமாகக் கையாளக்கூடியவர். இவரும் இந்தப் பந்தியில் பலமான போட்டியாளராகத் திகழ்கிறார்.

rajesh lakhani

சூடாகும் அதிகாரக் களம்
ஒருபுறம், முதலமைச்சரின் பாதுகாப்பையும் ஆட்சியின் இமேஜையும் மனதில் கொண்டு சாய்குமாருக்குப் பணிநீட்டிப்பு வழங்க மேலிடம் யோசித்து வருகிறது. மறுபுறம், தங்களுக்குச் சாதகமான ஒருவரை அந்த நாற்காலியில் உட்கார வைத்துத் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் துடிக்கும் மற்றொரு கேம்ப், விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகளின் பெயர்களை முன்வைத்து மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

பிப்ரவரி மாதம் நெருங்க நெருங்க, தலைமைச் செயலகத்தில் நிலவும் இந்த அதிகார மோதல் மேலும் பல திருப்பங்களைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago