திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மாட்டுச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும் வாரம் தோறும் புதன்கிழமை அதிகாலை துவங்கி மாட்டு சநதை நடைபெறுவது வழக்கம். அதேபோல் புதன்கிழமை காலை ஆட்டு சந்தையும் நடைபெறும். காலை 6 மணிக்கு துவங்கி நடைபெறும் ஆடுகளின் விற்பணையை பொறுத்து 9 – 10 மணிக்கு முடிவடையும்.
இந்த ஆட்டு சந்தையில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் ஆடுகளை விற்பணைக்கு அழைத்து வருவது வழக்கம். தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளநிலையில் இன்று நடைபெற்ற ஆண்டு சந்தையில் நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
கடந்த வாரத்தை விட தற்போது ஆட்டின் விலை கணிசமாக உயர்ந்திருந்தது. தீபாவளிக்காக விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் ஆடுகளை அதிகளவில் கொண்டு வந்திருந்தனர். திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சந்தையில் ஆடுகளை வாங்கிச்சென்றனர்.

இன்றைக்கு ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வெளி மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக தமிழகத்துக்கு கொண்டு வரப் படுவதால் நாட்டு ஆடுகளின் மவுசு குறைந்து விட்டது.
இதனால் நாட்டு ஆடுகளை அதிக விலை பேசிவாங்குவது குறைந்துள்ளது. முன்பு ஆடுகளின் உடலைப் பார்த்து விலை பேசப்பட்ட நிலையில் தற்போது ஆடுகளின் உயிர் எடைக்கு தகுந்தாற்போல் விலை பேசுவது அதிகரித்துள்ளது. இதனால் ஆட்டுக்கறியின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
