நவம்பர் ஒன்றாம் தேதி திமுகாவோட பொது செயலாளர் துரைமுருகனோட பேத்தியும், திமுக எம்.பி., கதிர் ஆனந்தோட மகளுமான செந்தாமரைக்கும், கடலூர் மாவட்டம், திட்டக்குடியை பூர்வீகமாக கொண்ட சினிமா தயாரிப்பாளர் கண்ணன் ரவியோட மகன் தீபக் ரவிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திருமணம் ரொம்ப பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த திருமணத்தில துரைமுருகனை பற்றி ரொம்ப உயர்வாகப் பேசினார் மு.க.ஸ்டாலின்.
திருமணம் நடைபெற்றதற்கு சில நாட்களுக்கு முன்பே கதிர் ஆனந்த் எம்.பி.,யோட வாட்ப் ஸ்டேட்டஸில் பெற்றோர்கள் பேச்சை பிள்ளைகள் கேட்க வேண்டும் என்கிற தொனியில் வாசகங்கள் ஷேர் செய்ததால் கதிர் ஆனந்தின் அந்த ஸ்டேட்டஸ் பார்த்த அவரது நெருங்கிய நண்பர்கள் எல்லாம் ”என்ன அர்த்தத்துல இதை போட்டிருக்கிறார்” என கன்ஃபியூஸில் சுற்றிக் கொண்டே இருந்தார்கள். இன்னொரு பக்கம் திராவிட முன்னேற்ற கழகதின் ஒரு ஒன்றிய செயலாளரோ அல்லது ஒரு மாவட்ட செயலாளரின் மகனோ, மகளோ அவர்களது வீட்டில் திருமணம் நடந்தால்கூட அது கட்சி திருமணமாகி அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் இன்விடேஷன் கொடுத்து அழைப்பது தான் வழக்கமான நடைமுறை.

ஆனால் திமுக பொதுச் செயலாளர் என்கிற ஒரு உச்சபட்ச பதவியில் இருக்கிற துரைமுருகன் வீட்டு திருமணத்துக்கு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பத்திரிக்கை கொடுத்தாரே தவிர இந்த 23 அணிகளில் பெரும்பாலான அணிகளின் நிர்வாகிகளை துரைமுருகன் இன்வைட் செய்யவே இல்லை. அதுமட்டுமில்லாமல் துரைமுருகனோட பேத்தி திருமணத்தில் வடமொழி மந்திரங்கள் ஓதப்பட்டது தொடர்பாக அவர் மீது கட்சி வட்டாரங்களில் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி துரைமுருகனோட பேத்திக்கும், அவருக்கு நெருக்கமான துபாய் தொழிலதிபரான கண்ணன் ரவியோட மகனுக்கும் நடந்த இந்த திருமணத்தோட ஆடம்பரம் தான் இப்போது எல்லார் கண்ணையும் உறுத்தி இருக்கிறது.
இந்த திருமணத்துக்காக இன்விடேஷன் வைக்கிறபோது அந்த இன்விடேஷனோட என்னெல்லாம் கொடுத்திருக்காங்க தெரியுமா? வைர மோதிரம், கோல்டு காயின், விளைவு உயர்ந்த வாட்ச், வெளிநாட்டு மூக்கு கண்ணாடி அதாவது கூலர்ஸ். இதெல்லாம் யார் யாருக்கு இன்விடேஷன் கொடுக்குறாங்களோ அவரவர் ஸ்டேட்டஸ்க்கு ஏற்ற மாதிரி பரிசு பொருட்களை வைத்துதான் அந்த இன்விடேஷனே கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த திருமணத்துக்கு குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய் செலவாகி இருக்கும் எனச் சொல்கிறார்கள்.

திமுக பொது செயலாளர் துரைமுருகன் மகன் எம்பி., கதிர் ஆனந்த்- கண்ணன் ரவி இவர்களுக்கு இடையில் இருக்கிற அந்த பிசினஸ் உறவு குறித்தும் பல்வேறு தகவல்கள் இப்போது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் ஏற்கனவே மணல் விவகாரத்தில அமலாக்கத்ததுறை டார்கெட்டில் இருக்கிற துரைமுருகன் இப்படிப்பட்ட ஆடம்பரமான திருமணம் நடத்தியது 1996 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்த வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை நினைவுபடுத்துகிஏஅ மாதிரி இருக்கிறது.
இந்த அடிப்படையில் துரைமுருகன் வீட்டு திருமணத்துக்கு இவ்வளவு பெரிய ஆடம்பரங்கள் செய்யப்பட்டதன் பின்னணி என்ன? என நீதிமன்றத்தில் வழக்கு போடுவதற்கும் சில தனி நபர்கள் தயாராகி வருகிறார்கள். ஆனால் தனி நபர்கள் கோர்ட்டுக்கு போறதெல்லாம் தாண்டி ஒரு தரமான சம்பவம் நடந்திருக்கிறது. துரைமுருகனின் சம்பந்தியாக இருக்கிற அந்த சினிமா தயாரிப்பாளர் கண்ணன் ரவி துபாயில் மிகப்பெரிய பிசினஸ் மேனாக இருக்கிறவர். சினிமா தயாரிப்பாளரவும் இருப்பதால் தன் வீட்டு திருமணத்தை ஒட்டி கடந்த மூன்று நாட்களாக சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட முக்கியமான புள்ளிகளை நட்சத்திர ஹோட்டலுக்கு இன்வைட் செய்து அங்கே பார்ட்டி கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் துரைமுருகன், கதிர் ஆனந்த் இவர்களின் துபாய் பிசினஸையும் இவர் ஏற்கனவே கவனித்து வருகிறார். இந்த அடிப்படையில்தான் இந்த திருமண சம்பந்தமே ஏற்பட்டிருக்கிறது என்கிற விஷயங்களும் பேசப்பட்டு வருகிறது. அழையா விருந்தாளியாக சில பேர் மறைமுகமாக அந்த கல்யாணத்துக்கு வந்திருந்தார்கள். இவர்கள் துரைமுருகனுக்கோ அல்லது கண்ணன் ரவிக்கோ அல்லது திமுகவுக்கோ சம்பந்தப்பட்டவங்களே கிடையாது. அமலாக்கதுறை அதிகாரிகள்தான்.
அழைக்காத திருமணத்துக்கு வந்தோம். ஆனால் கையோட சில பல ஆதாரங்களை அள்ளிட்டு போறோம் என ஈடி அதிகாரிகளும் அந்த ஆடம்பர விழாவில் அழையா விருந்தாளியாகப் புகுந்து ரகசிய ஆய்வில் ஈடுபட்டதுதான் இந்த திருமணத்தில் நடந்த மெயின் சுவாரசியமே.
