Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு அரசு மகளிர் கலைக் கல்லூரியின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று பெருந்துறையில் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது.

தமிழக முதல்வர் விஜய் நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவரது வருகையை முன்னிட்டு, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. கல்லூரி நிர்வாகத்தின் விளக்கப்படி, பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள கல்லூரிக்கு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பேருந்துகளில் வரும் மாணவிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்களால் கல்லூரியை அடைவதில் சிரமம் ஏற்படலாம் என்பதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்வு ஒத்திவைக்கப்பட்டாலும், கல்லூரி அலுவலகம் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்ததுடன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 13,676 பயனாளிகளுக்கு ரூ.62.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும், ரூ.68.31 கோடி செலவில் முடிக்கப்பட்ட 44 பணிகள் திறந்து வைக்கப்பட்டதாகவும், ரூ.11.72 கோடி மதிப்பிலான 70 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையும் படியுங்க  "தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத ஒரே நிறுவனம் NLC தான்!" - சட்டப்பேரவையில் எரிமலையாய் வெடித்த சௌமியா அன்புமணி!

விழாவின் ஒரு பகுதியாக, ரூ.23.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட புதிய உள்விளையாட்டு அரங்கையும், பொன்னமராவதியில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். விழா முடிந்ததும் அவர் சென்னைக்குத் திரும்பினார்.

இதனை முன்னிட்டு கல்லூரியில் நவ2-ம் தேதி காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளிலும் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, வரும் நவ. 6-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டன. இந்த சர்ச்சை சோசியல் மீடியாவில் ஏற்கனவே கொளுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், தற்போது பெருந்துறையில் கல்லூரி மாணவர்களை சி.எம். விஜயின் ரோடு ஷோவைக் காண அழைத்துச் சென்றது சர்ச்சையாகியுள்ளது.

முதலமைச்சர் விஜய் பெருந்துறை வர உள்ள நிலையில் அவரை வரவேற்பதற்காக, விஜயமங்கலத்தில் செயல்பட்டு வரும் சசூரி என்ற தனியார் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு 15-க்கும் மேற்பட்ட கல்லூரி பேருந்துகள் மூலமாக மாணவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்க  எது… இதுதான் நீங்க சொன்ன மாற்றமா?": இலவச அரிசியை ₹30-க்கு விற்கும் த.வெ.க அரசை வெளுத்து வாங்கிய உதயநிதி!

இவர் முதலமைச்சர் விஜய் வரும் பாதையில், விஜயமங்கலம் டோல் கேட் அருகே, கல்லூரி மாணவ மாணவிகள் நிற்கவைக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் இன்று ரோடு ஷோ மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை வரவேற்க பொதுமக்கள் யாரும் சாலைகளில் திரளவில்லை.

இதனால் சசூரி கல்வி நிறுவனங்களில் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி மற்றும் பார்மசி கல்லூரிகளில் பயின்று வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி தரப்பில் இருந்து அழைத்துவரப்பட்டு சாலையில் முதலமைச்சரை வரவேற்க நிறுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த சம்பவங்களை அடுத்து “படி..படி.. என்றால் அது திராவிட மாடல் அரசு… கொடி பிடி என்றால் அது தவெக மாடல் அரசு” என உ.பி.க்கள் சோசியல் மீடியாக்களில் விமர்சித்து வருகின்றனர்.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago