Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Gold Price

”தங்கம் வாங்குறதுக்கான சரியான நேரம் இதுதானா? ஏனென்றால் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து கொண்டே இருக்கிறது. ”இன்னும் தங்கம் விலை குறையும். இன்னும் ஒரு அஞ்சு ஆறு மாசத்துக்கு தங்கம் விலை
குறையும். அஞ்சு ஆறு மாசத்துக்குள்ள எப்ப வேணுமோ வாங்கிக்கோங்க” என பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.

இது குறித்து அவர், ”தங்கம் விலை குறைந்து கொண்டே போகும். 2027ல் தங்கத்தின் விலை எந்த அளவுக்கு இருக்கும் என்றால் ஒரு சவரன் மிகவும் கம்மியாக இருக்க வாய்ப்பு உள்ளது. எவ்வளவு வரை குறையும் என நம்மளால் சொல்ல முடியாது. ஏநனென்றால் சீனா அரசு தங்கத்தை வாங்கிக்கொண்டே இருக்கிறது. எங்கே இது மாறும் என்றால் அடுத்த ஆண்டு நடுவில் தங்கம் விலை திரும்பி ஏற ஆரம்பிக்கும்.

இன்றிலிருந்து 5, அல்லது 6 வருஷம் கழித்து தங்கம் ரூ.25,000 மாக இருக்கும். அப்போது தங்கத்தில் முதலீடு செய்வதைவிட பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். இன்னைக்கு இறங்க இறங்க தங்கம் வாங்குவது நல்லது.
தங்கம் வாங்குவது நமக்கு ஒரு இன்வெஸ்ட்மென்ட் வகையிலும், அதே நேரத்தில் நமக்கு ஒரு பெனிஃபிட்டாகவும் இருக்கும். உண்மையாகவே இருக்கும்.

இதையும் படியுங்க  5 DIY Home Decor Ideas on a Budget
Anandh Srinivasan

உங்களுக்கு முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் விலை இறங்க இறங்க வாங்குவது நல்லது.
நான் முன்பு 3500ல் இருந்து 10,000க்கு போகும் என்று சொன்னேநன. 15,000 வரைக்கும் போனது. நான் ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடியே தங்கம் விலை திரும்பி குறையும்னு சொன்னேன். குறைய ஆரம்பிச்சிருக்கிறது. மோடி வரியை உயர்த்தவில்லை என்றால் இன்னைக்கு தங்கம் விலை இன்னும் இறங்கி இருக்கும். மோடியால் இன்னைக்கு அது 13000ல இருக்கிறது. இல்லாவிட்டால்அது இன்னும் குறைந்திருக்கும்.

தங்கத்தின் விலை வந்து குறைவதால் நடுத்தர மக்கள், ஏழைகள் எல்லாம் வாங்க முடிகிறது. இதுவே உயர்ந்தால் யாருக்கு பெனிஃபிட்? யார் லாபம் அடைகிறார்? எப்போதுமே ஒன்று புரிந்து கொள்ளுனங்கள். இப்போது இந்த அரசு இருக்கிற வரை இது பணக்காரர்களுக்கான அரசாங்கம். பணக்காரங்களுக்கான அரசாங்கம் என்றால் இன்கம் டாக்ஸை கம்மி பண்ணி அவர்களுக்கு பணத்தை கையில் கொடுப்பது மாதிரி.

gold loan

அவர்கள் 1 கிலோ தங்கம் வைத்திருக்கிறார்கள் என்றால் நம்மிடம் ஒரு 500 கிராம் தங்கம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். எனக்கு ₹1000 விலை ஏற்றி விட்டாம் நாம் ஒன்னும் பண்ணாமல் 55 லட்சம் ரூபாய் கிடைச்சிரும். என்கிட்ட 1000 கிராம் இருக்கு. நான் ஒன்னும் பண்ணாம எனக்கு 10 லட்சம் ரூபாய் கிடைச்சிரும். ஒரு சராசரி மனிதன் 10 லட்சம் ரூபாய் எடுத்து வீட்டில் வைக்கணும்னா எவ்வளவு நாள் ஆகும்?

இதையும் படியுங்க  "பெற்றோர்களே உஷார்! உங்க ஜீன் தான் உங்க குழந்தையோட IQ-வை முடிவு பண்ணுதா?"

அவன் வாழ்க்கை முழுவதும் வேலை செஞ்சாலும் முடியாது. இதிலிருந்து யாருக்கு அரசாங்கம் நடக்குதுன்னு உங்களுக்கு தெரியும். யார் அரசாங்கத்தில் இருந்தாலும் மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்க மாட்டார்கள். வாங்குவதை வாங்கிக்கொண்டுதான் இருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago