Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Gold Price

கடந்த சில வாரங்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள திடீர் சரிவு நடுத்தர வர்க்கத்தினரையும், முதலீட்டாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சவரன் தங்கம் ₹1,18,400 என்ற அளவிற்கு சரிந்துள்ள நிலையில், ஒரு கிராம் ₹12,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவுக்கான உண்மையான காரணங்கள் என்ன? இது தங்கம் வாங்க சரியான தருணமா? தங்கம் விலை அதிரடியாகக் குறையக் காரணங்கள் என்ன?

அமெரிக்க பெட் வட்டி விகித நிலவரம்
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படவும் இல்லை, குறைக்கப்படவும் இல்லை. இந்தத் தாக்கத்தால் தங்கம் விலையில் சிறிய இறக்க முகக் காணப்பட்டது.

Gold

பேங்க் ஆஃப் அமெரிக்காவின் கணிப்பு
அமெரிக்காவின் முன்னணி வங்கியான ‘பேங்க் ஆஃப் அமெரிக்கா’, தங்கம் விலை டிராய் அவுன்ஸ் ஒன்று $4,000-$4,100 என்ற நிலையிலிருந்து $3,500 மற்றும் $3,300 வரை சரிய வாய்ப்புள்ளதாக ஒரு கணிப்பை வெளியிட்டது. இதனால் உலக சந்தையில் ஏற்பட்ட ‘பேனிக் செல்லிங்’ காரணமாகத் தங்கம் விலை கிடுகிடுவெனக் குறையத் தொடங்கியது.

இதையும் படியுங்க  "இனிமே தங்கம் வாங்கக்கூடாதா?"  இந்தியர்களுக்கு பிரதமர் மோடி போட்ட புதிய கண்டிஷன்! வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!

தங்கத்தை விற்ற நாடுகள்
பொருளாதார நெருக்கடி மற்றும் போர்ச் சூழல் காரணமாக ரஷ்யா தனது கையிருப்பிலிருந்த தங்கத்தை பெருமளவில் விற்றுள்ளது. கடந்த ஆண்டு வெறும் 6 டன் விற்ற ரஷ்யா, இந்த ஆண்டு ஜூன்-ஜூலை வரையிலேயே சுமார் 83 டன் தங்கத்தை விற்றுள்ளது. துருக்கியும் 44 டன் வரை விற்றுள்ளது. இதுவும் உலக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சர்வதேச பொருளாதார காரணங்கள்
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறி வருவது மற்றும் அமெரிக்கத் தேர்தல் நெருங்குவது போன்ற காரணங்களாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.

பேங்க் ஆஃப் அமெரிக்காவின் கணிப்பு பலிக்குமா?
பேங்க் ஆஃப் அமெரிக்கா போன்ற அமைப்புகள் தங்கம் விலை குறையும் என்று கணித்தாலும், கடந்த காலங்களிலும் இதுபோன்ற கணிப்புகள் பொய்யாகி, தங்கம் விலை சில வாரங்களிலேயே எகிறிச் சென்ற வரலாறும் உண்டு. குறிப்பாக, ஜேபி மோர்கன் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்கம் விலை $6,000-ஐத் தாண்டும் என்றும் கணித்துள்ளன. எனவே, தற்காலிக சரிவுகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

இதையும் படியுங்க  ஒலிம்பிக் வீரர்கள் படிக்கும் காலேஜ்..! லண்டனில் இன்பநிதி ஸ்டாலின் வாங்கிய 'மாஸ்' பட்டம்.. என்ன தகுதி வேணும் தெரியுமா?

வெள்ளியின் நிலை என்ன?
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதன் உச்சபட்ச விலையிலிருந்து சுமார் 52% முதல் 54% வரை சரிந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கிலோ வெள்ளி ரூ. 2 லட்சத்திற்கு அருகில் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை விட வெள்ளியின் விலை வீழ்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதால், இதுவும் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்களுக்கு இது ‘ஜாக்பாட்’ நேரமா?
தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ஹோல்ட் செய்யும் மனநிலையில் இருக்க வேண்டும். ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் விற்று லாபம் பார்க்கலாம் என்று ஷேர் மார்க்கெட் போல நினைத்து இறங்குவது சூதாட்டத்திற்கு சமமாகிவிடும்.

gold loan

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில், தங்கத்தின் தேவையும் வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும். கடந்த 10 ஆண்டுகளாகவே கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு சமயங்களில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகளும் (இந்திய ரிசர்வ் வங்கி உட்பட) தங்கத்தைத் தொடர்ந்து வாங்கி குவித்து வருகின்றன. நமது ரிசர்வ் வங்கியின் கையிருப்பு 880 டன்னாக உள்ள நிலையில், விரைவில் அதனை 1,000 டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் மத்திய வங்கிகளே தங்கத்தைப் பெருமளவில் வாங்கிச்சேமிக்கும் போது, எதிர்காலத்தில் தங்கத்தின் மதிப்பு உயர்வது உறுதி.

இதையும் படியுங்க  1 பவுன் தங்கம் விற்றால், நகைக்கடைக்கு இவ்வளவு லாபமா..? பில்லில் மறைக்கப்படும் உண்மைகள்..!

தற்போது தங்கத்தின் விலை அதன் உச்சத்திலிருந்து சுமார் 24% வரை குறைந்துள்ளது. தங்கம் வாங்க விரும்புவோருக்கும், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கும் இது ஒரு ‘ஜாக்பாட்’ நேரம் என்றே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். உங்களுக்குத் தேவையான தங்கத்தை இந்தக் குறைவான விலையில் திட்டமிட்டு வாங்குவது புத்திசாலித்தனமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 hours ago at 11 hours ago