Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

kalaiyarasan

சார்… நீங்கதானே கலையரசன்?” அதிகாலை 5 மணி. சென்னை அடையாறு. விடியக்கூட இல்லை.

வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. தூக்கக் கலக்கத்தில் கதவைத் திறக்கிறார் பேராசிரியர் அ.கலையரசன். வெளியே சீருடையில் இல்லை… சாதாரண உடையில் மூன்று பேர்.

“போலீஸ்… விசாரணைக்கு வரணும்!” கையில் சம்மன் இல்லை. விளக்கம் இல்லை. இரவு உடையில் இருந்தவரை அப்படியே ஒரு வாடகைக் காரில் ஏற்றுகிறார்கள்.

யார் இந்த கலையரசன்? சாதாரண நபர் அல்ல. MIDS எனப்படும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர். பொருளாதார அறிஞர். சர்வதேச அளவில் அறியப்பட்ட எழுத்தாளர், பேச்சாளர்.

அவரையா… அதிகாலையில் தூக்கிச் செல்கிறார்கள்? வேர் இன்ஸ்டாகிராமில் இருக்கிறது! விவகாரத்தின் தொடக்கப்புள்ளி ஒரு புகார்.

பல்லாவரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ ஜெ.காமாட்சி தரப்பில், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் கொடுக்கப்படுகிறது. “எம்.எல்.ஏ-வை ஆபாசமாக விமர்சித்து இன்ஸ்டாகிராமில் கமெண்ட் போட்டிருக்கிறார்கள்” என்பதுதான் புகார்.

அந்தக் கணக்கைப் பார்த்தால்… பெயர் ‘கலையரசன்’. புகைப்படமும் கலையரசனுடையது. அவ்வளவுதான்! காவல்துறை முடிவுக்கு வந்துவிட்டது. “பேராசிரியர்தான் போட்டிருக்கிறார்!”

இதையும் படியுங்க  அன்றே சொன்னார் ஜெயலலிதா..! இன்று  நிஜமாக்கிய விஜய்..! ஜே.சி.டி.பிரபாகரனை நெகிழும் அம்மாவின் நிழம்..!

சரிபார்த்தார்களா? இல்லை! அந்த அக்கவுண்ட் உண்மையானதா, போலியானதா என்று ஒரு அடிப்படை தொழில்நுட்பச் சரிபார்ப்புகூட இல்லாமல், அதிகாலையில் வீடு புகுந்து தூக்கிச் சென்றிருக்கிறார்கள்.

மூன்று மணி நேர விசாரணைக்குப் பிறகுதான் உண்மை தெரிகிறது.

அது கலையரசனின் புகைப்படத்தைத் திருடி உருவாக்கப்பட்ட Fake Account! அவருக்கும் அந்த ஆபாச கமெண்ட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியானதும், அவரை விடுவித்திருக்கிறது போலீஸ்.

“Act first, verify later?” – இப்போது தமிழ்நாடே கேட்கும் கேள்வி இதுதான். டேமேஜ் கண்ட்ரோலில் அரசு! விவகாரம் வெடித்ததும் எதிர்க்கட்சிகள் பாய்ந்தன.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “இது பாசிசத்தின் உச்சம்” என்று கடுமையாகச் சாடியிருக்கிறார். “முதல்வர் விஜய் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

காரணம்… விலைவாசி! இங்குதான் சஸ்பென்ஸ்! சமீப காலமாக பேராசிரியர் கலையரசன், தமிழகத்தில் தாறுமாறாக எகிறிவரும் விலைவாசி உயர்வு குறித்து தொடர்ந்து பேசி வந்தார். பொருளாதார ஆய்வுகளின் அடிப்படையில், புள்ளிவிவரங்களோடு அரசின் தோல்வியை அம்பலப்படுத்தி வந்தார். மேடைகளிலும், ஊடக விவாதங்களிலும் அவரது குரல் ஓங்கி ஒலித்தது.

இதையும் படியுங்க   “அந்த ஃபைல்ஸை ஓபன் பண்ண வச்சிடாதீங்க…” - பேரவையில் கண்கள் சிவந்த சி.எம்.விஜய்… திமுகவுக்கு நேரடி வார்னிங்...!

“விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசை விமர்சித்ததற்காகவே, பழிவாங்கும் நோக்கில் போலீஸை ஏவிவிட்டிருக்கிறது தவெக அரசு. Fake Account என்பது வெறும் சாக்கு!” – இதுதான் விமர்சகர்களின் குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பது போலவே அமைந்துவிட்டது போலீஸாரின் செயல்பாடு.

ஒரு இன்ஸ்டாகிராம் கமெண்ட்டுக்காக, எந்தவித தொழில்நுட்பச் சரிபார்ப்பும் இல்லாமல், சீருடைகூட அணியாமல் அதிகாலையில் வீடு புகுவதா?

இது விசாரணையா… இல்லை எச்சரிக்கையா? ஜனநாயகத்தில் விமர்சனம் என்பது எதிரி அல்ல; அது திருத்திக்கொள்வதற்கான கண்ணாடி.

விலைவாசி உயர்வு பற்றிப் பேசிய ஒரு பொருளாதார அறிஞரை, போலி கணக்கை (உருவாக்கி) காரணம் காட்டி அதிகாலையில் தூக்கிச் செல்வது… இது காவல்துறையின் அலட்சியம் மட்டுமல்ல; அதிகாரத்தின் ஆணவம்!

தவறு செய்துவிட்டு, மறுநாள் தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வருத்தம் தெரிவித்தால் போதுமா?

சட்ட அமைச்சரே “போலீஸ் தரப்பில் தவறு” என்று ஒப்புக்கொண்ட பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? இதுவரை பதில் இல்லை.

“பாசிசத்தின் உச்சம்” என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்திருப்பது வெறும் அரசியல் வார்த்தை அல்ல; அது ஒரு அபாய எச்சரிக்கை.

இதையும் படியுங்க  "நமக்கு இனி இங்கு எதிர்காலம் இல்லை!" அதிமுக-வினர் ஆதிக்கம்.. ‘கூண்டோடு மாற்றுக் கட்சிக்கு தாவும் தவெக நிர்வாகிகள்..?

விலைவாசி குறித்து கேள்வி கேட்டாலே கைது என்ற நிலை வந்தால்… நாளை கேள்வி கேட்க யார் மிஞ்சுவார்கள்?

Fake Account-ஐ கண்டுபிடிக்கத் தெரியாத காவல்துறைக்கு, உண்மையான பொருளாதாரப் பிரச்சினையை எப்படிப் புரிந்துகொள்ளத் தெரியும்?

முதல்வர் சி.ஜோசப் விஜய் தெரிவித்த வருத்தம் போதாது; இனி இப்படி ஒரு அத்துமீறல் நடக்காது என்பதற்கான உத்தரவாதமும், தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கையும்தான் தேவை.

இல்லையென்றால், இது மன்னிப்பு அல்ல… வெறும் டேமேஜ் கண்ட்ரோல் நாடகம் என்றே வரலாறு பதிவு செய்யும்!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago