Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

bar

தர்மபுரி ஜோதி மகாலில் நடக்கும் செயற்குழுவில் கலந்தாலோசித்துதான் மறுசீரமைப்பு செய்வேன் என்று சொன்ன ‘பார்’ இளங்கோவன், இப்போது சில ஒன்றியச் செயலாளர்களை வைத்து பென்னாகரம் தொகுதிக்கு ரகசியமாகப் பொறுப்பாளர்கள் லிஸ்ட் தயாரித்துவிட்டார். தங்குவதற்கு சந்திரா ஹோட்டல் என கூறியவர் , ஒகேனக்கல் சொகுசு விடுதியில் தங்கி உள்ளார்

2018 பாணியில் சகல கவனிப்பா ?

“பார்’ கவனிப்பில் மதி மயங்கி, மாவட்டங்களை பரிந்துரைப்பவர்களை ‘சரிங்க எஜமான்னு ஏற்றுக்கொள்ள வேண்டாம். கட்சிக்காரர்களின் கருத்தையும் கேட்டுச் செயல்படுங்கள்னு தலைவரே சொல்லியிருக்கிறார் , இனி பாரால் தர்மபுரியில் வெற்றி சாத்தியமே இல்லை” இப்படி சமூக வலைதளங்களில் “பார் இளங்கோவன் நியமனத்திற்கு எதிராக உடன்பிறப்புகள் கொந்தளித்து வருகின்றனர்

விவகாரம் குறித்து மூத்த உடன்பிறப்புகளிடம் பேசியதில்

தர்மபுரி… தி.மு.க-வுக்கு சிம்ம சொப்பனம்! – 2011 முதல் 2026 வரை தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் மாவட்டம் தர்மபுரி. 2018 மறுசீரமைப்பின்போது நாமக்கல்லைச் சேர்ந்த ‘பார்’ இளங்கோவனைப் பொறுப்பாளராக நியமித்தது தலைமை. அன்று தொடங்கிய சர்ச்சை, 2026 தேர்தல் தோல்விக்குப் பிறகும் அதே பாணியில் தொடர்கிறது.

இதையும் படியுங்க  விஜயை இன்று சந்திக்கும் சி.வி.சண்முகம்..? தூள் தூளாகும் ஸ்டாலின் ஸ்கெட்ச்..! அதிரடி திருப்பம்..!

2018-ல் பார் இளங்கோவன் தர்மபுரி வந்தபோது, அப்போதைய மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்ரமணியும், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக இருந்த (தற்போதைய எம்.பி) ஆ.மணியும் இரட்டையர்களாக வலம்வந்தனர். ‘பாரை’ ஒதுக்குப்புறமான சொகுசு விடுதிக்கு மாற்றி, சகல வசதிகளும் செய்து ‘கவனித்தனர்’. அந்த கவனிப்பு விடுதி ஓனர் வெளியே துரத்தும்படி சந்தி சிரித்தது அப்படி ஒரு ஆட்டம்

அந்தக் ‘கவனிப்பின்’ பலன்… இரட்டையர்கள் சிபாரிசு செய்தவர்களுக்கு மட்டுமே கட்சிப் பொறுப்புகளை ‘பார்’ பரிந்துரைத்தார். கவனிப்பில் திக்குமுக்காடிபோன பார், தடங்கத்துக்கு தர்மபுரி தொகுதியையும், பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தலில் பாலக்கோடு தொகுதியிலிருந்து ‘இறக்குமதி’ செய்யப்பட்ட ஆ.மணியை வேட்பாளராகவும் பரிந்துரைத்தார். தோல்வியை கண்டு துவளாத மணி அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி ஆனார். இப்போது கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் தொடர்கிறார். எல்லாம் ‘பார்’ ஆசிர்வாதம்தான் என்கிறார்கள்

2026-லும் மீண்டும் ‘பார்’! வெடிக்கும் உடன்பிறப்புகள்

2026- சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதியிலும் படுதோல்வியைச் சந்தித்த தி.மு.க, மறுசீரமைப்புக்கான பொறுப்பாளர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 2018-ல் நியமிக்கப்பட்ட அதே பார் இளங்கோவனையே மீண்டும் நியமித்திருக்கிறது தலைமை.

இதையும் படியுங்க   ”மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு! திமுக முப்பெரும் விழா அதிரடியாக ஒத்திவைப்பு!

இந்தமுறை மேற்கு மாவட்டச் செயலாளர் பழனியப்பனும், கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆ.மணியும் சேர்ந்து, அவரை தர்மபுரியில் தங்கவைக்காமல், ஒகேனக்கல் காவிரிக் கரையோர சொகுசு விடுதியில் தங்கவைத்து ‘சகல கவனிப்பும்’ நடத்தியுள்ளனர்.

“2018-ல் தடங்கம் இருந்த இடத்தில் இப்போது பழனியப்பன்… தர்மபுரி கவனிப்பை மிஞ்சும் வகையில் ஒகேனக்கல்லில் நடக்கிறது. இனி தர்மபுரியில் எந்தக் காலத்திலும் தி.மு.க வெற்றிபெறாது” என்று ஆவேசப்பட்டனர்

யார் இந்த ‘பார்’ இளங்கோவன்?

நாமக்கல் உடன்பிறப்புகள் சொல்வதோ வேறு கதை. “சொந்தத் தொகுதியில் செல்வாக்கு இல்லாததால் 2016-ல் திருச்செங்கோடு தொகுதியில் இறக்கப்பட்டு படுதோல்வி அடைந்தவர். அதன்பிறகு நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக ஓராண்டு மட்டுமே நீடித்தார். இவைதான் அவரது செல்வாக்கு” தலைவரின் பி.ஏ தினேஷ் பரிந்துரையில்தான் மாநிலத் தேர்தல் பிரிவுச் செயலாளராகத் தொடர்ந்து நீடிப்பதாகவும், “தர்மபுரியைப் போலவே நாமக்கல்லிலும் உழைத்தவர்களுக்குப் பதவி இல்லை. இதுபோன்று துரோகிகள் மீது புகார் அனுப்பினால், அது தலைமைக்குப் போவதற்குள் புகாருக்கு உள்ளானவரிடமே போய்ச் சேர்ந்துவிடும்” என்கிறார்கள் நாமக்கல் உடன்பிறப்புகள்.

இதையும் படியுங்க  இன்னொரு தோல்வியை தாங்க முடியாது.. இடைத் தேர்தலில் ஜகா வாங்கிய ஸ்டாலின்..! விஜயின் அசுர பலத்தால் நடுக்கம்..!

“இங்கு மாவட்டப் பொறுப்புக்கு வரும் தி.மு.க-வினர் ஜாதிப் பற்றாளர்களாகவே உள்ளனர். தேர்தல் வந்தாலே பா.ம.க தரப்பில் ‘கவனிப்பும்’, ஜாதிப் பாசமும் ஊட்டிவிடப்படுகிறது. இதனால் சொந்தக் கட்சிக்கே குழிதோண்டுகிறார்கள். தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றிபெற, கூட்டணிக்கு ஒதுக்கி ஆ.மணி உள்ளடி வேலை பார்த்ததன் விளைவே தி.மு.க தோல்வி. அதிமுக அன்பழகனிடமும் விலைபோய்விடுகிறார்கள். இந்த லட்சணத்தில் அதே ‘பார்’ பார்ட்டி வேற… கிழிஞ்சது போங்க” என்று சலித்துக்கொள்கிறார் பாலக்கோட்டை சேர்ந்த உடன்பிறப்பு ஒருவர்.

“சட்டமன்றத் தேர்தலில் விட்டுக்கொடுத்தால், நாடாளுமன்றத் தேர்தலில் உன்னை வெற்றிபெற வைப்போம் என்று பா.ம.க – அதிமுக தரப்பு மணியுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும்” குமுறுகின்றனர்.

தர்மபுரி தி.மு.க தோல்விக்குப் பின்னால் ‘கவனிப்பு அரசியல்’ இருப்பதாக உடன்பிறப்புகள் முணுமுணுக்க, தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதே இப்போதைய கேள்வி!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago