மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகளால் தவெக தலைமை அதிர்ச்சி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாமக வாக்குகளால் தான் ஆளும் கட்சி தப்பித்ததா? என்ற விவாதமும் எழுந்திருக்கிறது.
இதற்கிடையில் விசிக வாக்குகள் திமுக பக்கம் சென்றதாக உளவுத்துறை ரிப்போர்ட் அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அடுத்த அரசியல் கணக்குடன் திமுகவை நாடிய திருமாவளவன் மீண்டும் கூட்டணிக்கு வருவதற்கு முன்பே வாசலிலேயே திருப்பி அனுப்பிய உதயநிதி என பரபரப்பு தகவல்கள் கசிகின்றன. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலின் பல புதிய கணக்குகளை திறந்துவிட்டுள்ளன. குறிப்பாக ஆளும் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எதிர்கால கூட்டணியை மனதில் வைத்து திமுக தலைமையோடு ரகசிய பேச்சு வார்த்தை நடத்த முயன்றதாகவும் அதற்கு உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

இவ்விறு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவியது. இதில் ஆளும் கட்சி வெற்றி பெற்றாலும் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. பெரிய கூட்டணி இருந்தும் ஏன் இப்படியானது என உளவுத்துறை களத்தில் இறங்கியுள்ளது. அதில் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்திருக்கிறது.
கடுப்பான முதல்வர் விஜய்
ஆதவ் அர்ஜூனை ”எல்லாம் உன்னாலதான்” விஜய் என திட்டி தீர்த்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை பாமக, அதிமுக கூட்டணியில் இருந்து வெளிவராமலும் சி.வி.ஷண்முகம் களத்தில் இருந்திருந்தால் கதையே மாறி இருக்குமாம். ஆம் விசிக ஓட்டுக்கள் ஏதும் ஆளும் தரப்புக்கு வரவில்லையாம். அது திமுக பக்கம் சென்றதாக உளவுத்துறை ரிப்போர்ட் கூறியிருக்கிறது.
மானத்தை காப்பாற்றியது பாமக ஓட்டுக்கள். அதிருப்தி அதிமுக ஓட்டுக்கள் மற்றும் விஜய்க்கு விழுந்த ஓட்டுக்கள் தானா? கூட்டணியால் ஒரு பிரயோஜனமும் இல்லையா? அதற்கு அதிமுக, பாஜக கூட கூட்டணி வைத்தாலே போதும். நாம் ஐந்து வருடத்தை ஓட்டி விடலாம். மத்திய அமைச்சர் பதவி வாங்கி இருக்கலாம். தமிழக மக்களுக்கு நல்லது செய்திருக்கலாம் என கோட்டை வட்டாரம் புலம்பி தள்ளிவிட்டதாம். அதன் ஒரு பகுதியாகத்தான் பாமகவை உள்ளே கொண்டுவரும் திட்டமாம். அதே நேரத்தில் ஆளும் தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக ஆட்சி அதிகாரத்திலும் தேர்தல் களத்திலும் எதிர்பார்த்த முக்கியத்துவத்தை பெற முடியாமல் தவித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இடைத்தேர்தல் பிரச்சார களங்களிலேயே தவெக தலைமைக்கும், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் இடையே வெளிப்படையான ஒருங்கிணைப்பு இல்லாத சூழல் நிலவி இருக்கிறது. இதனால் சுதாரித்துக் கொண்ட திருமாவளவன் தவெக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது மீண்டும் திமுக பக்கம் நகர்வதா? என்ற குழப்பத்தில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் வழியாக மீண்டும் ஒரு புதிய உடன்படிக்கைக்கான தூதுவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் திமுக தலைமையின் முக்கிய முடிவெடுக்கும் இடத்திற்கு சென்றபோது உதயநிதி ஸ்டாலின் இதற்கு மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததாக கோட்டை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுங்கட்சி பக்கம் சென்றுவிட்டு அங்கும் நிலைக்க முடியாமல் மீண்டும் திமுகவை நோக்கி வருவதும் பின்னர் திமுகவை விமர்சிப்பதும் அரசியல் முதிர்ச்சியற்ற போக்கு என்று திமுக தரப்பில் காரசாரமாக பேசப்பட்டிருக்கிறது. மேலும் இனி எந்த சமரசமும் செய்து கொண்டு அவர்களை மீண்டும் கூட்டணியில் சேர்க்க தேவையில்லை என்று உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக முடிவெடுத்து விட்டதாகவும் தெரிகிறது.
ஆளும் தவெக கூட்டணியில் முழுமையான நிம்மதி கிடைக்காமலும், பழைய கூட்டணி கட்சியான திமுக கதவை முழுமையாக அடைத்து விட்டதாலும் விசிகவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.
