Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

TVK

சென்னை பள்ளிக்கருணையில் மனைவியுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து தாவிக்க நிர்வாகியை கையும் களவுமாக பிடித்து கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர் வேதனை தெரிவித்துள்ளார். மகேந்திரன் என்பவர் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில் அவருடைய மனைவி தவெக நிர்வாகியான முகேஷ் என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட கணவன் கூறூகையில், ”இவன்தான் டிவி டிவிகே வட்ட செயலாளர். 190 வட்ட செயலாளர் யு முகேஷ். நான் காலையில ஏர்போர்ட்ல இருந்து வீட்டுக்கு வரும்போது என் மனைவியும், அவனும் எங்க வீட்டுக்குள்ள ஒன்னா கூத்தடிச்சிட்டு இருந்தாங்க. நான் நேரடியா கண்டுபிடிச்சிட்டு உடனே வீட்ட பூட்டிட்டு கால் பண்ணி போலீஸ் வர சொல்லி போலீஸ் வந்து ரெக்கவரி பண்ணி தவெக கட்சினால அவனை பாதுகாக்க முய₹இ செய்தாங்க. போலீஸ் வந்து எங்கள வீட்டுக்குள்ளே விடாம அவங்களுக்கு ஆதரவாவே எங்கள உள்ள விட்டு வீடியோ எடுக்க விடாம எல்லாத்தையும் எங்கள விரட்டி விட்டுட்டு போலீஸ் அவங்களே கூட்டிட்டு வந்து ஸ்டேஷன் வச்சிருக்காங்க. இன்னும் கம்ப்ளைன்ட் கொடுத்தா கம்ப்ளைன்ட் எடுக்க மாட்டறாங்க. ஏற்கனவே ஏப்ரல் மாசம் ஒரு கேஸ் இருக்கு.

இதையும் படியுங்க  100 வருஷமா யாருக்கும் தெரியாத சபாநாயகர் நாற்காலியின் ரகசியம்! உள்ளே இருக்கும் அந்த மர்ம அறை?

என்னை என் பொண்டாட்டியும் இவனும் சேர்ந்து அடிச்சு என்ன கொலை பண்ண முயற்சி பண்ணிட்டு அந்த கேஸ் இருக்கு. அந்த கேஸ்ல இவங்க மேல எந்த ஆக்ஷனும் எடுக்கல. எஃப்ஆர் போடல. சிஎஸ்ஆர் மட்டும் வச்சிருக்கேன். அதுக்கான எவிடன்ஸ் இருக்கு. போலீஸ் இது தொடர்பா மேற்கொண்ட நடவடிக்கை எடுக்க மாட்டறாங்க. இப்ப ஆளுங்கட்சில அவன் இருப்பதால டிவிகே கட்சில இருந்து ரெண்டு பேருமே கட்சி பதவில இருக்காங்க. மனைவி சென்னை புறநகர் மாவட்ட துணை செயலாளர். முகேஷ் 190 வட்ட செயலாளரா இருக்கான். அதனால போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கல.

நான் நேத்து சிங்கப்பூர்ல இருந்து கிளம்பி இன்னைக்கு காலையில வரேன். ஏர்போர்ட்ல இருந்து வீட்டுக்குள்ள போக முடியல. வீட்டுக்குள்ள விடாம ரெண்டு பேரும் வந்து என்னை அடிக்கிறதுக்கு முயற்சி பண்ணாங்க. வீட்டுக்குள்ளேயே விடாம என்ன வீட்டை பூட்டி வச்சுக்கிட்டு நான் நடுரோட்ல நிக்கிறேன். எனக்கு இது நீதி வேணும். என்னோட 250 நகையும் ஏமாத்தி வச்சுக்கிட்டாங்க. என் மனைவி பேர்ல பிசினஸ் பண்ணி கொடுத்தேன்.

இதையும் படியுங்க  மதமும் மாறணும்.. சலுகையும் வேணுமா..? கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு தலித் பாதுகாப்பு இல்லை: உயர் நீதிமன்றம் அதிரடி

அவங்களுக்கு இடம் வாங்கி கொடுத்தேன். அந்த இடத்தை அவங்க அபகரிச்சுக்கிட்டாங்க. என்ன கொலை செய்ய மிரட்டல் விட்டார்கள். அதனால்தான் ஊரை விட்டே போனேன். சென்னைய விட்டு போன காரணமே அவன் தான்” என கண்ணீர் மல்க கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago