Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Jailer 2

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நாளை (அக்டோபர் 15) வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிக்கல் எங்கே?

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் படம் வெளியாவதில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சேலம் பகுதியில் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக “ADVANCE BOOKINGS DELAYED IN SALEM” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளிலும் இதே நிலை நீடிப்பதாக  வெளியாகியுள்ளது.

காரணம் என்ன? 75% vs 65% இழுபறி வசூல் பங்கீடு தொடர்பான தகராறே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

விநியோகஸ்தர்கள் தரப்பு மொத்த வசூலில் 75 சதவீதம் பங்கு  வரை தரவேண்டும் எனவும், அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் 65 சதவீதம் மட்டுமே தர முடியும் என உறுதியாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது 

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு 65 சதவீத பங்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்திற்கும் அதே அளவுதான் தர முடியும் என தியேட்டர் உரிமையாளர்கள் வாதிடுவதாக கூறப்படுகிறது. இந்த ‘ஜனநாயகன்’ பஞ்சாயத்துதான் தற்போது ‘ஜெயிலர் 2’ வரை தொடர்வதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இதையும் படியுங்க  "ராஷி கண்ணாவை நெகிழ வைத்த ரஜினியின் சர்ப்ரைஸ் கிப்ட்..

இந்த இழுபறி காரணமாக தான் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட திரையரங்குகளில் திரையிடல் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.  

ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி , ஜெயிலர்’ முதல் பாகம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் மட்டும் முன்பதிவில் ரூ.13.64 கோடி வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெளியீட்டுக்கு சில மணி நேரங்களுக்கு முன் எழுந்துள்ள இந்த சிக்கல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தயாரிப்பு நிறுவனம் என்ன சொல்கிறது?

இதனிடையே, இந்தியில் ‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் OTT விண்டோ தொடர்பாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சிக்கல் இருப்பதாக வெளியான தகவலையடுத்து, பட வெளியீட்டில் எந்த சிக்கலும் இல்லை, அக்டோபர் 15-ல் உறுதியாக வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால், மாவட்ட அளவிலான விநியோகஸ்தர் – திரையரங்கு உரிமையாளர் இழுபறி தொடர்ந்தால், திட்டமிட்டபடி அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் காட்சிகள் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் இன்று இரவுக்குள் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க  அரசியல்வாதியைவிட கொடுமையானவன்..! ''சினிமாக்காரனுக்கு அடிமை நாயா நீ..?'' தமிழா விழித்தெழு..! சமூக ஆர்வலரின் warning

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago