Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

இடைத்தேர்தலில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என பொறுப்பாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் கறார் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பல அதிரடிகளை இரண்டு தொகுதிகளிலும் தவெக செய்து வருகிறது. குறிப்பாக தாராபுரத்தில் தவெகவின் அரசியல் ஆக்சன் படுவேகத்தில் இருக்கிறது.

தாராபுரத்தில் அதிமுகவுக்கு சாதகமான அலை வீசுகிறது என் செய்திகள் அலையடிக்க துவங்க தவெக அந்த தொகுதியில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அதிமுக முன்னாள் எம்பியாகவும், எம்எல்ஏவாகவும் இருந்த மடத்துக்குளம் மகேந்திரன் தவெக-வில் இணைந்திருக்கிறார். இவர்தான் தாராபுரம் தொகுதியை உள்ளடக்கிய மாவட்டத்துக்கு அதிமுக மாவட்ட செயலாளராக இருந்தவர்.

Sathyabama

இவர் தவெகவில் சேர்ந்த ஒரு மணி நேரத்தில் இவருக்காகவே மடத்துக்குளம் தொகுதியை மட்டுமே உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத்தை புதிதாக உருவாக்கி மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

முக்கியமாக சத்தியபாமாவுக்கு தொகுதியில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கும் நிலையில், மகேந்திரனே தவெகவில் சேர்ந்துவிட்டார். அதனால் இனி அந்த எதிர்ப்பு இருக்காது என்கிறார்கள். இன்னொரு பக்கம் செங்கோட்டையனின் குடும்பத்துக்கு சம்பந்தியாவும் இருக்கக்கூடிய மகேந்திரன், எஸ்.பி. வேலுமணியின் வலது கரமாகவும் இருந்தவர்.

இதையும் படியுங்க  "சென்னையே ஸ்தம்பிக்கப் போகும் அக்டோபர் 11! ஒரே மேடையில் பிரதமர் மோடி - CM விஜய்… சென்னை மக்களுக்குக் கிடைத்த செம குட் நியூஸ்!"
Madathukulam mahendran

இப்போது இருவருமே அதிமுகவில் இல்லாததால் அங்கு தனக்கு பெரிய எதிர்காலம் இல்லை என தவெகவில் இணைந்து இருக்கிறார். சொல்லப்போனால் கடந்த முறை அதிமுக சார்பாக போட்டியிட்ட சத்தியபாமா வெற்றி பெற கிரவுண்ட் லெவலில் பக்காவாக வேலை பார்த்ததே மகேந்திரன் தான். இப்போது அதே சத்தியபாமாவை பெரிய வாக்கு வித்தியாசத்தில் தவெக-வுக்காக ஜெயிக்க வைத்து காட்டுகிறேன் என தவெகவுக்கு வந்திருக்கிறார் மகேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago