Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Veeramani

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தாய் ஒருவர் அளித்த புதிய புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

முதன்மைப் போக்சோ வழக்கில் ஆகஸ்ட் 29 அன்று கைது செய்யப்பட்ட வீரமணியின் நீதிமன்றக் காவலை, அக்டோபர் 9-ஆம் தேதி வரை நீட்டித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் அவர் புழல் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பெண் காவல் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பல்வேறு வீடியோ ஆதாரங்கள், லஞ்சப் புகார்கள் மற்றும் பிளாக்மெயில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தன்னிடம் ஒரு அரசியல் பிரமுகர் பெரிய தொகை கேட்டு கன்னத்தில் அறைந்ததாகவும் இன்னும் பல விஷயங்களை சொல்லி மிரட்டியதாகவும் ஜெம் கிரானைட் வீரமணி வாய் திறக்கத் துவங்கி இருக்கிறாராம். இதே விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிற இன்னொரு கட்சி தலைவர் ஜான் பாண்டியன் வெளிநாட்டுக்கு கிளம்பி விட்டார்.

இதையும் படியுங்க  "10 லட்சம் கோடி கடன் சர்ச்சை: புள்ளிவிவரங்களால் பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!"
John Pandian

ஆரம்பத்தில் வாயே திறக்காமல் கல் நெஞ்சக்காரராக இருந்த வீரமணி இப்போது தைரியமாக பல உண்மைகளை சொல்ல துவங்கி இருக்கிறார். அதிலும் முக்கியமாக தேசிய கட்சியில் மாநில பிரிவில் இருக்கக்கூடிய எஸ்சி- எஸ்டி தலைவர் ரஞ்சன் குமார் தன் கைக்கு வந்த வீடியோவை காட்டி ”இதெல்லாம் பெரிய மனுஷன் செய்யக்கூடிய
வேலையா? கேட்ட காசை கொடுக்க வேண்டியதுதானே ரூல்ஸ் எல்லாம் பேசுறியா? ஆளையே காணாம பண்ணிருவேன்;; என மிரட்டியதோடு வீரமணி கண்ணத்தில் பளாரென ஒரு அறை விட்டாராம்.

இவரை மாதிரியே இன்னும் யார் யாரெல்லாம் இந்த விவகாரத்தில் தன்னிடம் பேரம் பேசினார்கள் என கடந்த திமுக ஆட்சிக்கு நெருக்கமாக இருந்த யாரெல்லாம் அந்த பேரத்தில் ஈடுபட்டார்கள் என சொல்லி இருக்கிறாராம் வீரமணி. எப்படியும் போலீஸ் தன்மீது நடவடிக்கை பாயும் என நினைக்கக்கூடிய ஒரு தென்மாவட்ட அரசியல் கட்சி தலைவரான ஜான் பாண்டியன் வெளிநாட்டுக்கு போய்விட்டார்.

Veeramani Ranjan kumar

இதே மாதிரிதான் கே.என்.நேருவோடு நெருங்கிய வட்டத்தில் இருந்த ஒருவர் நான்கு நாளுக்கு முன் லண்டன் போக முடிவெடுத்து ஏர்போர்ட் போக, அவரை போலீஸ் போகவிடவில்லை. இவர் நேரு மீது போடப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவராம். இப்போது இருக்கக்கூடிய தவெக ஆட்சி மேலிடம் பெரிய குற்றங்களில் தொடர்புடையவர்கள் வெளிநாட்டுக்கு போகாமல் கண்காணிக்க கூடிய வேலைக்குதான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு இருக்கிறதாம்.

இதையும் படியுங்க  “தோண்டியெடுங்க நான் பாத்துக்குறேன்…” - கிரீன் சிக்னல் கொடுத்த விஜய்… திமுக மாஜிக்கள் காலடியில் கன்னிவெடி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago