Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay’s Kamarajar Scheme

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணயத்திடம்தாக்கல் செய்த செலவு கணக்குகள் இப்போது கவனத்தை ஈர்க்க தொடங்கி இருக்கிறது. கணக்கில் காட்டப்பட்டிருக்கிற தொகைகள் ஏற்கனவே பல 100 கோடிகளை தொட்டு இருந்தாலும் தேர்தல் களத்தில் நடக்கிற பிரச்சாரத்தின் விளம்பரங்கள், கூட்டங்கள், வாகனங்கள், டிஜிட்டல் பிரச்சாரம், பரிசு பொருட்கள் பணம் பட்டு வாடா என பார்க்கிறபோது தேர்த ஆணயத்திடம் தாக்கல் செய்யப்படுற கணக்குதான் தேர்தலுக்காக செய்யப்படுற உண்மையான செலவா? என கேள்வியும் எழுகிறது.

சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக 197.85 கோடி ரூபாய் செலவிட்டதாவும் அதிமுக 112.40 கோடி ரூபாயும் பாஜக சுமார் 51.56 கோடி ரூபாயும் செலவிட்டதாக தேர்தல் ஆணயத்தின் கணக்குகள் தெரிவிக்கிறது. திமுகவின் கணக்கில் சுமார் 148.90 கோடி ரூபாய் பிரச்சார செலவாகவும், 47.95 95 கோடி ரூபாய் வேட்பாளர்களுக்கு தொடர்புடைய செலவாகவும் காட்டப்பட்டு இருக்கிறது. வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட தொகை 45.75 கோடி ரூபாய் என்றும் பல வேட்பாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வீதம் ஆர்டிஜிஎஸ் மூலமாக வழங்கப்பட்டதாவும் அறிக்கை தெரிவிக்கிறது.

M.K. Stalin

அதிமுகவின் கணக்கில் பொது பிரச்சாரத்துக்காக 109 கோடி ரூபாயும், வேட்பாளர்களுக்காக 2.78 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாஜக சுமார் 51.56 56 கோடி, காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கான செலவாக 22.25 கோடி ரூபாயும், நாம் தமிழர் கட்சி 1.37 கோடி ரூபாய், பகுஜன் சமாஜ் கட்சி 2.17 கோடி செலவிட்டதாவும் கணக்குகள் வெளியாகி இருக்கிறது. தவெகவின் தேர்தல் செலவு கணக்குகள் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.

இதையும் படியுங்க  தவெக MLA-வின் 'ரீல்ஸ்' மோகம்.. கேரளா பார்டரில் பாய்ந்த வழக்கு!

தேர்தல் செலவில் இருக்கிற மிக முக்கியமான சட்டவரம்பு வேட்பாளருக்கான செலவு உச்சவரம்புதான். தமிழ்நாட்டில் ஒரு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிற வேட்பாளர் அதிகபட்சம் 40 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணயம் நிர்ணயித்தது. அதாவது 234 தொகுதிகளில் போட்டியிடுற ஒரு கட்சியோட வேட்பாளர்கள் ஒவ்வொருத்தரும் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் செலவிட்டால் மொத்தம் 93.6 கோடி ரூபாய் என்கிற அளவுக்கு செலவு செய்ய முடியும். ஆனால் இது ஒவ்வொரு வேட்பாளருக்கான சட்டப்பூர்வ உச்சவரம்பு மட்டும்தானே தவிர அரசியல் கட்சியின் மொத்த பிரச்சார செலவு உச்சவரம்பு கிடையாது.

Edappadi

திமுகவின் 197 கோடி ரூபாய், அதிமுகவின் 112 கோடி ரூபாய் பாஜகவின் 51 கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிற எண்கள் தேர்தல் என்கிற மிகப்பெரிய பொருளாதார நடவடிக்கையாக மாறி இருக்கிறது என்கிற ஒரு முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்த எண்களை மட்டும் வைத்து இவ்வளவுதான் தேர்தலுக்கான உண்மையான செலவு என முடிவு செய்து விட முடியாது. தேர்தல் காலங்களில் பணப்பட்டுவாடா விவகாரம் தலைதூக்கி ஒரு வேட்பாளர் சட்டப்படி செலவிட்டதாக தாக்கல் செய்கிற கணக்கும், அந்த தொகுதியில் தேர்தலை சுத்தி நடந்த மொத்த பணப்புழக்கமும் வேறுபடுகிறது.

இதையும் படியுங்க  'நான் என்ன தவறு செய்தேன்..? எடப்பாடியிடம் ஜகா வாங்கும் எம்.எல்.ஏ-க்கள்..!

2026 தேர்தலுக்கு முன்பே பல களத்தகவல்கள் ஒரு சட்டப்பேரவை வேட்பாளருக்கான சட்டப்பூர்வ செலவு உச்சவரம்பையும் தாண்டி போட்டியிடுற வேட்பாளருக்கு சுமார் 5 கோடி ரூபாய் வரைக்கும் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. அதாவது வேட்பாளர் செலவாக காட்டுகிற 40 லட்சத்துடன் இதை ஒப்பிட்டால் 5 கோடி என்பது 12.5 மடங்கு அதிகம். இன்னும் சில வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கு 20லிருந்து 30 கோடி ரூபாய் வரை செலவிடுவதாகவும் கூறப்படுகிறது. அது அதிகாரப்பூர்வ வரம்புடன் ஒப்பிட்டால் 10 கோடி என்பது 25 மடங்கும், 20 கோடி 50 மடங்கும், 30 கோடி 75 மடங்கும் அதிகம். ஒரு அரசியல் கட்சி நிர்வாகி ஒரு தொகுதிக்கான சராசரி செலவு சுமார் 8 கோடி ரூபாய் என்றால் அதில் 5 கோடி வரை வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள் வழங்குவதற்கும், மீதித்தொகை பூத் செலவு, விளம்பரம் மாதிரியான விஷயங்களுக்கு செலவாகும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

VIJAY

அதனால் உண்மையான செலவு என அதிகாரப்பூர்வ கணக்கை விட 10லிருந்து 20 மடங்கு அதிகமாக இருக்கலாம் என 2026 தமிழ்நாடு தேர்தலை பற்றி ஒரு தோராயமான மதிப்பீடும் இருக்கிறது. ஜனநாயகத்தில பண தேவை முற்றிலும் இல்லாமல் போகாது. தேர்தலை நடத்த பிரச்சாரம் செய்ய பணம் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு சாதாரண மனிதன்
தனது கருத்தையும், கொள்கையையும் எடுத்துக் கொண்டு தேர்தல் களத்துக்கு வர முடியாமல் கோடிகளை திரட்ட கூடியவர்களுக்கே அரசியல் வாய்ப்பு என்கிற நிலை உருவானால் அது தேர்தல் செலவு பிரச்சனையையும் தாண்டி ஜனநாயகத்தின் கதவு யாருக்காக திறக்கிறது என்கிற கேள்வியையும் எழுப்புகிறது.

இதையும் படியுங்க  "ஊழல்வாதிகள் கட்சியில் இருந்தால்... எப்படி லஞ்சமில்லாத ஆட்சி வரும்?" - முதல்வர் விஜய்க்கு சகாயம் IAS எழுப்பிய நேரடி கேள்வி!

தேர்தல் ஆணயத்திடம் தாக்கல் செய்யப்படுற கணக்கு ஒரு பக்கம், தேர்தல் களத்தில் பேசப்படுற செலவு தொகை இன்னொரு பக்கம். இந்த இரண்டுக்கும் நடுவில் பெரிய இடைவெளி இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தேர்தலில் வெல்வது மக்கள் ஆதரவிலா? பணத்தின் பலத்திலா? என எழுகிற கேள்வியை தவிர்க்க முடியாத நிலையில் தவெகவின் வெற்றி இதை மாற்றி அமைத்திருக்கிற ஒரு நம்பிக்கையாகப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago