ஜெம் வீரமணியோடு சாந்தி, அவரது கணவர் மகேந்திரன் முதலில் கைது செய்யப்பட்டார்கள். அதன்பிறகு வீரமணியிடம் 23 ஆண்டுகளாக வேலை பார்த்த கணேசனையும் கைது செய்திருக்கிறது காவல் துறை. கணேசனின் வங்கிக்கணக்கை போலீசார் சோதனையிட்டபோது அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது.
ஜெம் வீரமணிக்கு வலதுகரமாக இருந்தவர்தான் கணேசன். அவரது அக்கவுண்ட்டில் இருந்தும் சில போலீஸ் அதிகாரிகளுக்கு பணம் டிரான்ஸ்பர் ஆகி இருக்கிறது. இதில் சில பத்திரிகையாளர்களுக்கும் பணம் போய் இருக்கிறது.

ஜெம் வீரமணி- கணேசன் தரப்பில் இருந்து போலீஸ் அதிகாரிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பணம் செட்டில் மெண்ட் விஷயத்தில் இறங்கி செய்தவர் பிரகாஷ். அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக தொடர்ந்து பதவியில் இருக்கிற கண்ணையாவின் மகன்தான் இந்த பிரகாஷ். இப்போது இவர் வெளிநாட்டில் இருக்கிறார். இவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஜெம் வீரமணியுடன் இவருக்கு படு நெருக்கம். இன்னொரு பக்கம் ஜெம் வீரமணிக்காக, திமுகவுடன் நெருக்கமாக இருக்கும் ‘கொங்கு மண்டல’ ஜாதி கட்சித் தலைவர் ஒருவர் அதே கொங்கு மண்டல அமைச்சரிடம் பேசிப்பார்த்துள்ளார். ஆனால் அந்த அமைச்சரோ, “அண்ணே.. இந்த விவகாரத்துல எல்லாம் தலையிடவே முடியாது.. இது சீரியசாக போயிகிட்டு இருக்கு” எனச் சொல்லி எஸ்கேப் ஆகி விட்டாராம்.
ஜெயிலில் இருக்கும் வீரமணி, வார்டன்களிடம் பேசும் போது ரொம்பவே புலம்புகிறாராம்.. “இப்படி எல்லாம் நடக்காதுன்னு சொல்லியே என்கிட்ட பெரும் பணம் வாங்கினாங்க.. நானும் கொடுத்தேன். ஆனா யாரும் எதுவும் செய்யலை…”எனச் சொல்கிறாராம்.
அதே நேரத்தில் ஜெம் வீரமணியை சிறையில் சந்திக்கும் அவருக்கு நெருக்கமானவர்கள் “இன்னும் கொஞ்சம் மீடியாக்களுக்கு எல்லாம் செலவு செய்யலாம். கொஞ்சம் கண்ட்ரோலா இருக்கும்”எனச் சொல்ல.. “யப்பா அதெல்லாம் வேண்டாம்.. இதுக்கு மேல என்ன இருக்குது..? கொடுத்தவரைக்குமே போதும்.. இனி நடக்குறது நடக்கட்டும்” என சொல்லிவிட்டாராம்.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் இந்த வழக்கின் போக்கு எப்படி என்பதை இந்தியாவே உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறது. இப்போது சிபிஐ விசாரணை கேட்டு தலைமை நீதிபதி பெஞ்ச் முன்பாக மனு போட்டிருக்கிறார்கள். இப்படி ஒரு மனு வரும் என தெரிந்து கொண்டுதான் இன்றைக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவை அதுவும் பெண் அதிகாரிகளைக் கொண்ட குழுவை தவெக அரசு அறிவித்துள்ளது.
இதை பற்றி உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பெஞ்ச் விசாரணைகளை தொடர்ந்து கவனித்து கொண்டு வருபவர்களிடம் பேசியபோது “என்னதான் மாநில அரசு நடவடிக்கை எடுத்தாலும் மாநில போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்காகவும் இருக்கிறது. மாநில போலீஸ் அதிகாரிகள் மீதுள்ள வழக்கை தமிழக போலீஸ் விசாரித்தால் எப்படி சரியாக வரும்? என நார்மலாகவே சிபிஐக்குதான் இந்த வழக்கு போகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்கள்.
