Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Veeramani

ஜெம் வீரமணி 40 க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுவை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 2024ஆம் ஆண்டே இது குறித்து தான் புகார் அளித்ததாக ரஞ்சன் குமார் ஆதாரங்களை வெளியிட்டடிருப்பதும் வீரமணியை மிரட்டி 20 கோடி ரூபாய் வாங்கி தருமாறு தன்னிடம் கேட்டதாக ஜான் பாண்டியனும் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெம் வீரமணி விவகாரத்தில் நடந்தது என்ன?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் இதற்குள் நுழைந்தது எப்படி? ஜெம் வீரமணியின் தோழியான சாந்தியும் பர்சனல் செக்ரட்டரியாக இருந்த கீதாவும் ஜெம் வீரமணியின் அசிங்க செயல்களுக்கு ஏற்பாடு செய்வது என அனைத்தையும் பார்த்து கொண்டு வந்துள்ளனர். வீரமணி தன்னால் இறையாக்கப்பட்ட எந்த ஒரு சிறுமியையும் வெளியில் விடாமல் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்ததாகவும் அந்த சிறுமிகள் ஆசைப்படும் படிப்பை படிக்க வைப்பது, அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுப்பது, அவர்கள் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் எந்த குறையும் இல்லாமல் பார்த்து கொள்வது அவரது வழக்கம் என்கிறார்கள்.

கடந்த 40 ஆண்டுகளில் வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் சிலர் 40 வயது வரை அங்கேயே பணி செய்து கொண்டிருப்பதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரு கட்டத்தில் கீதாவின் கை ஓங்குவதை அறிந்த சாந்தி தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த வீடியோவை வைத்து வீரமணியை மிரட்டி சொத்தில் பாதியை தனது பெயருக்கு எழுதி கேட்டுள்ளார். தான் வெளிநாடு செல்வதற்காக லைப்டைம் செட்டில்மென்ட் செய்துவிடுமாறும் நச்சரித்துள்ளார். இதை அடுத்து வீரமணி நெல்லையை சேர்ந்த ஜான் பாண்டியனை வைத்து சாந்தியை மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போதுதான் சாந்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ். பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் உதவியை நாடியுள்ளார்.

இதையும் படியுங்க  கண்ணிமைக்கும் நேரத்தில் கருகிய உழைப்பு..!! திருச்செந்தூரில் 9 லட்ச ரூபாய் வலைகள் தீக்கிரையான அதிர்ச்சி சம்பவம்!

இது குறித்து பேசிய ரஞ்சன் குமார் ”ஜெம் வீரமணியின் தோழியான சாந்தி தனக்கு 2024ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் மூலம் பழக்கமானதாகவும் பின்னாளில் அவர் தனக்கு போன் செய்து ஜான் பாண்டியனுடன் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யுமாறும் கூறியதாகவும் தெரிவித்தார். நுங்கம்பாக்கத்தில் ஒரு ஹோட்டலில் நடந்த அந்த மீட்டிங்கில் ஜான் பாண்டியன் சாந்தியை திட்டியதோடு ஜெம் வீரமணியின் வண்டவாளம் பற்றி பேசியதாக சொல்லப்படுகிறது. ”சார் ஆக்சுவலா சாந்தி அவங்க எனக்கு ஒரு 2024ல ஒரு ரியல் எஸ்டேட் ரிலேட்டடா அவங்க எனக்கு பழக்கம். அவங்க ஒரு கன்ஸ்ட்ரக்சன் பண்றாங்க. அது சேல்ஸ்க்கு வருது. எனக்கு தெரிஞ்சவங்க. அந்த மாதிரி ஒரு இடம் கேக்குறதுனால அவங்கள அணுகுறோம். ஆனா அது பைனலைஸ் ஆகல. அப்போ எனக்கும் அவங்களுக்கும் ஒரு காண்டாக்ட் ஏற்படுது. அவங்க என் நம்பர ஸ்டோர் பண்ணிக்காங்க. அவங்க நம்பரை நான் ஸ்டோர் பண்ணிக்கிறேன்.

Veeramani

அதுக்கப்பறமா 2024 ஜூன், ஜூலை இருக்கும். 24 இந்த செப்டம்பர் வாக்குல திரும்பி சாந்தி எனக்கு கால் பண்றாங்க, மெசேஜ் பண்றாங்க. ஜான் பாண்டியன மீட் பண்ணனும்னு சொல்றாங்க. வீரமணி யார், ஜெம் கிரானைட்லாம் அப்ப எனக்கு சொல்லல. அவங்க இப்ப நான் ஒருத்தருக்கு பணம் கொடுத்துருந்தேன். அந்த பணத்தை கேட்டு நான்ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பினேன். அந்த அட்வகேட்ட ஜான் பாண்டியன் போய் மிரட்டி இருக்காரு. அப்ப என்னையும் தப்பு தப்பா பேசி ரொம்ப அசிங்கமா பேசி இருக்காரு. நான் சொன்னேன் மேடம் கலெக்ட் பண்ணி தர வேலை என் வேலை இல்லை. நீங்கலீகலா நோட்டீஸ் அனுப்பி பாருங்கநு சொன்னேன்.

இதையும் படியுங்க  தமிழ்நாட்டை உலுக்கிய கோர விபத்து! அமோனியா வாயு கசிவால் பறிபோன உயிர்கள்.. பெரியபாளையத்தில் நடந்தது என்ன?

இல்ல இல்ல… நான் பணம் கலெக்ட் பண்ணி தரது பற்றி உங்ககிட்ட பேசல. நான் ஜான் பாண்டியன் தப்பா புரிஞ்சிருக்கறாரு அவர்கிட்ட நான் அப்படி இல்லன்நு சொல்லுங்க. அவரை சந்திக்கணும். அவ்ளோதான். ஒரு பாதிக்கப்பட்ட ஒரு லேடி கேக்குறேன். நீங்க ஒரு சேம் தலித் தலைவர். இத ஏன் பண்ண மாட்டேன்றீங்கன்னு கேட்டாங்க. சரி ஒரு வுமன் பாதிக்கப்பட்டிருக்காங்க ஏதோ நடக்குதுன்றதுக்காக நான் அவருக்கு போன் பண்றேன். உங்கள இந்த மாதிரி சந்திக்கணும். ஜான் பாண்டியனுக்கும் சாந்தி என்று சொன்ன உடனேஅவருக்கு தெரியுது. எல்லாமே சரிப்பா. நான் அமெரிக்கா போறேன். நான் அமெரிக்கா போயிட்டு ஒரு 10, 12 நாள்ல திரும்புவேன். வந்த உடனே நான் சொல்றேன் மீட் பண்ணலாம் என்றார்.

அதுக்கப்புறம் அவர் போயிட்டு வந்து அவரே கூப்பிட்டார். ஒரு 10, 12 நாள் கழிச்சு வந்துட்டேன்பா. அந்த அம்மாவை கூப்பிட்டுவா என்றார். அப்படி நுங்கம்பாக்கட்தில் ஒரு ஹோட்டல்ல மீட் பண்றோம். அங்கே பேசும்போதுதான் ஜான் பாண்டியன் திட்டினார். ”என்ன நீ சும்மா ஏமாத்தி காசு வாங்கிட்டு இருக்க. என்ன நீ அடங்க மாட்டியா? என அவங்களுக்குள்ள வாக்குவாதம். அப்போ அவர் எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறார். அந்த அம்மாவுக்கும், வீரமணிக்கும் உள்ள தொடர்பு, இந்த அம்மாக்கும் அவருக்கும் ஜனவரி மாசம் ஒரு அஞ்சு கோடி ரூபாய் வாங்குனீங்க. இந்த அம்மாவோட பையன் அமெரிக்கால இருக்கிறான். அவன் வீரமணிக்கு பிறந்த பையன்னு அந்த அம்மா சொல்றாங்க. அந்த மாதிரி கான்வர்சேஷன்லாம் நடக்குது.

அப்புறம் ஏம்மா நீ வீடியோ எல்லாம் அனுப்பி ஏதோ பயம் காட்டிறீயாமே..? இதில் தலையிட மாட்டோம் எனச் சொல்லி விட்டார். அதன் பிறகுதான் மற்ற விஷயங்கள் எனக்கு தெரிய வருகிறது. நான் உடனே எ இந்த மாதிரி விஷயத்துக்கு என்னை ஏன் கூப்பிட்டீங்க? நான் விலக்கிறேன் என சொல்லி விட்டேன். பின்னர் சாந்தி போயஸ் கார்டனில் உள்ள வீட்டிற்கு அழைத்து டிவியில் சில வீடியோக்களை காண்பித்ததாகவும் அந்த வீடியோவில் ஜெம் வீரமணி 15 வயது சிறுமிக்கு கிப்ட் பாக்ஸை கொடுத்துவிட்டு தவறாக நடந்ததாகவும் இதையெல்லாம் தான் போனில் வீடியோ எடுத்து 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே புகார் அளித்ததாக ரஞ்சன் குமார் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படியுங்க   "ரிப்பன் மாளிகை கதவுகளை உடைத்து தூய்மைப் பணியாளர்கள் அதிரடி முற்றுகை! "வாக்குறுதிகள் என்னாச்சு?" - முதல்வர் விஜய்க்கு அவசரக் கோரிக்கை!"
veeramani

வீரமணி மற்றும் அவருக்கு உதவிய சாந்தியை கைது செய்ய வலியுறுத்தியும் பாதிக்கப்பட்டசிறுமிகள் யார் என்று கேட்டு போலீசார் மெத்தனம் காட்டியதாகவும் புகாரளித்த மூன்று மாதங்கள் வரை தொடர்பில் இருந்த ஆய்வாளர் 2025 ஜனவரிக்கு பிறகே தொடர்பை துண்டித்து வழக்கு பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டதாகவும் ரஞ்சன் குமார் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இச்சம்பவம் குறித்து பேசிய ஜான் பாண்டியன், தனக்கு சாந்தியே ரஞ்சன்குமார் மூலமாகத்தான் தெரியும். வீரமணியிடம் பணம் நிறைய இருக்கிறது. 20 கோடி ரூபாய் அவரிடம் வாங்கி கொடுங்கள் என கூறினார்கள். நான் அதில் இருந்து விலகி கொண்டேன் என தெரிவித்தார். நான் மிரட்டினேன் என கூறும் ரஞ்சன் குமார் அப்போதே காவல் நிலையத்தில் ஏன் புகார் அளிக்கவில்லை என அவர் ஆவேசமாக தெரிவித்தார். ஏஐ தொழில்நுப்பு உதவியுடன் வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளை போலீசார் அடையாளம் கண்டிருப்பதாகவும் இதுவரை 10
சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago