Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Veeramani

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருவது ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி மீதான பாலியல் வழக்கு தான். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் அப்பாவி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த வீரமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீரமணிக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரின் தோழியான சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் வீரமணிக்கு வலதுகரமாகச் செயல்பட்ட கணேசன் என்பவரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட கணேசன் 23 ஆண்டுகளாக வீரமணி நடத்தி வரும் ஜெம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரமணி மீதான பாலியல் வழக்கு ஒருவரையும் விடக்கூடாது என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி எந்த தகவலையும் கண்டறிய முடியவில்லை என நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை அளித்த விசாரணை அதிகாரிகளான விபசார தடுப்புப்பிரிவு உதவி ஆணையராக இருந்த யாஸ்மின், இன்ஸ்பெக்டர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோர் மீதும், இந்த புகார் தொடர்பான விசாரணையை முறையாக மேற்பார்வையிடாத அப்போதைய சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கண்ணன், காவல் ஆணையர் அருண் ஆகியோர் மீதும் நடவடிக்கை பாய்ந்தது. அருண், யாஷ்மின் ஆகியோர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்க  UPI மூலம் கோடி கோடியாய் லஞ்சம்..! கொத்தாக சிக்கிய EB அதிகாரிகள்..! தமிழகத்தையே உலுக்கிய மெகா டிஜிட்டல் ஊழல்..!

இந்த வழக்கில் இருந்து தொழில் அதிபர் வீரமணியை காப்பாற்றுவதற்காக போலீஸ் துறையை சேர்ந்தவர்களும், அரசியல் புள்ளிகளும், இடைத்தரகர்களும் வீரமணியிடம் இருந்து ரூ.70 கோடி பணத்தை வாங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீரமணியின் டைரியில் அவர் யார்? யாருக்கு? எவ்வளவு பணம் கொடுத்தார் என்ற தகவல் உள்ளது. வீரமணி இதுபற்றிய அதிர்ச்சியான தகவல்களை போலீஸ் விசாரணையில் தெரிவித்தாக கூறப்படுகிறது.

வீரமணி தொடர்பாக பாலியல் வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. சென்னை காவல் ஆணையர் அமல் ராஜ் தலைமையில் கூடுதல் ஆணையர் தேன்மொழி, இணை ஆணையர் திஷா மிட்டல், கண்காணிப்பாளர்கள் முத்தரசி, கீதாஞ்சலி ஆகியோர் சிறப்பு புலனாய்வுக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் நான்கு பெண் போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago