Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Maragatham Kumaravel

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பள்ளி மாணவர்களின் கைகளில் தவெக கட்சியின் கொடிகள் கொடுக்கப்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் பகுதி கிராமங்களில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பள்ளிச் சீருடை அணிந்திருந்த சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் தவெக கட்சியின் கொடிகள் விநியோகிக்கப்பட்டு, அவர்கள் வேட்பாளருக்கு ஆதரவாக கொடிகளை அசைத்தபடி பிரச்சாரத்தில் நின்றதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகளையோ அல்லது பள்ளி மாணவர்களையோ ஈடுபடுத்தக் கூடாது என்ற விதிகள் உள்ள நிலையில், தவெகவினர் பள்ளி மாணவர்களை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், மதுராந்தகம் அடுத்த கருங்குழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோதுதான் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  “பிரஸ் மீட்டில் ரீ-டேக் கேட்ட தவெக அமைச்சர்… சொந்த துறையிலேயே தடுமாற்றம்!
School Uniform

வேட்பாளரின் இந்தப் பிரச்சார சர்ச்சை தவெகவினருக்கு கூடுதல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மாணவர்கள் வெறும் கட்சிக் கொடிகளை மட்டும் பிடித்திருக்காமல், தவெக கட்சித் துண்டுகளையும் அணிந்தபடி பிரச்சாரத்தில் நின்றதாகக் கூறப்படும் நிலையில், அது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகியிருப்பது விமர்சனங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தவெக வேட்பாளர் எக்காரணம் கொண்டும் வெற்றி பெறக் கூடாது என்று கூறியதுடன், இதுபோன்ற விதிமீறல்கள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) நேரடி உத்தரவின்படி, எந்தவொரு அரசியல் கட்சியும் குழந்தைகளையோ அல்லது பள்ளி மாணவர்களையோ பிரச்சாரப் பணிகளிலோ, கொடி கட்டும் பணிகளிலோ அல்லது கட்சி சின்னங்களை அணிவிக்கும் வகையிலோ பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இதையும் படியுங்க  ஆந்திர பாணியில் ஆதவ் அர்ஜுனா ஆட்சியை கவிழ்த்துவிடுவார் என்ற பயமா? இறங்கி விளையாடும் அப்பாவு!

இதனால், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், வேட்பாளரின் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது தவெக முகாமிற்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வாக்காளர்களைக் கவர வித்தியாசமான உத்திகளைக் கையாண்டு வருகிறார் Facebook. பிரச்சாரத்தின் போது அங்கிருந்த ஒரு உள்ளூர் டீ கடைக்குள் புகுந்து, அவரே டீ போட்டு அங்கிருந்த பொதுமக்களுக்குக் கொடுத்து வாக்கு சேகரித்த சுவாரசியமான சம்பவமும் அதே பகுதியில் நடந்துள்ளது

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago