Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Anbil mahesh

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்த வழக்கின் தொடர்ச்சிக்காக கடந்த 16 ஆம் தேதி முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சொந்தமான சென்னை திருச்சி உட்பட ஒன்பது இடங்களில் மத்திய குற்றப்பிருவு பொலீசாரால் சோதனை நடத்தப்பட்டது.ம் வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்திருந்த நிலையில் காலை 11 மணி அளவில் வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரவு காவல் அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆஜரானார்.

இதனிடையே அன்பில் மகேஷிடம் வேலை பார்த்த சுரேஷ் என்பவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரசகுமார், முத்துகுமார் இருவரும் சேர்ந்து மொத்தம் 420 கோடி ரூபாய் வசூல் செய்து அன்பில் மகேஷ் மனைவியிடம் கொடுத்ததாகவும் அதில் அரசுக்குமாருக்கு ஒரு தொகை, முத்துக்குமாருக்கு ஒரு தொகை வழங்கப்பட்டதாகவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் பேசி யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்க  மின்சார வாரியத்தில் ஊழல்..! தடயங்களை அழிக்க ‘18 ஹார்டு டிஸ்க்குகளை திருடிய திமுகவினர்..!? நள்ளிரவில் சிக்கிய க்ளூ!
Anbil Mahesh

70 கோடி ரூபாய் முத்துக்குமாருக்கும், 50 கோடி ரூபாய் அரசகுமாருக்கும், 300 கோடி ரூபாய் அன்பி முகேஷுக்கும் கொடுத்தது மொத்தம் 420 கோடி ரூபாய் வசூல் பண்ணாங்க. அதுக்கான ஆதாரம் நான் ரிப்போர்ட்டோட உள்ள வச்சிருக்கேன். அப்போ எனக்கு மிரட்டல் விட்டதுனால நான் இதை வந்து டெலீட் பண்ணிட்டேன். மிரட்டல் விட்டது. அன்பில் மகேஷோட பர்சனல் டிரைவர் கோபாலகிருஷ்ணன். இந்த வீடியோவை பார்த்து அன்பில் மகேஷிடம் டிரைவராக வேலை பார்த்து வரும் கோபாலகிருஷ்ணன் என்னை பார்த்தால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கிறார் என ஆடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

”நீ என்ன வேணா பண்ணு தம்பி. நீ பண்ணதே முதல்ல நம்பிக்கை துரோகம். நேர்ல மட்டும் மாட்டிறாத. உன்னை கொலையே பண்ணுவாங்க சரியா” என அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது. மேலும் அன்பில் மகேஷ் வீட்டில் ரைடு நடப்பது முன்கூட்டியே முதல் நாள் இரவே தகவல் கசிந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்க  ஸ்டாலின் வைத்த செக்..! விழி பிதுங்கு விஜய்..! தலைகீழாய் மாறும் அரசியல் களம்.. 9-ம் தேதி ட்விஸ்ட்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago