Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Anbil makesh

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரமும் டிசிசிபி சான்றுதலும் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு ரைடு வேட்டையை தொடங்கியிருக்கிறது. சோதனை முடிவில் அன்பில் மகேஷ் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இந்த அதிரடி வேட்டை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

திமுக பவர் சென்டர்களில் முக்கிய புள்ளியான பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் திருச்சி தென்னூர் இல்லம், சென்னை உள்ளிட்ட நான்கு இடங்கள் அவரது உதவியாளர் வாலாடி கார்த்திக்கின் இரண்டு இடங்கள் என ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு படை அதிரடி ரைடில் இறங்கி கிடுக்கி பிடி போட்டிருக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கி தருகிறோம். சிஎம்டிஏ டிடிசிபி அனுமதி, ஸ்கூல் அப்கிரேடேஷன் எல்லாம் முடித்து தருகிறோம் என ஆசை காட்டி நெட்வொர்க் அமைத்து வலை விரித்திருக்கிறது ஒரு கும்பல்.

Anbil Mahesh

தர்மபுரியைச் சேர்ந்த இளங்கோவன் பெருநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகார்தான் இதன் ஸ்டார்டிங் பாயிண்ட். இந்த மோசடி புகாரில் பதிவு செய்யப்படாத தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கத் தலைவரான பி.டி.அரசகுமார், பொருளாளர் முத்துக்குமார் இருவரையும் ஜூன் மாதமே தூக்கி குண்டாசில் லாக் செய்தது போலீஸ்.

இதையும் படியுங்க  "2027-ல் பஞ்சாப் சிம்மாசனம் யாருக்கு?" - டெல்லி பதவியை உதறிவிட்டு களமிறங்கிய ரவ்நீத் சிங் பிட்டு! பரபரக்கும் பாஜக வியூகம்!

ஏ1 அரசகுமாரின் 20 வங்கி கணக்குகள், ஏ2 முத்துக்குமாரின் 29 வங்கி கணக்குகள் என மொத்தம் 49 பேங்க் அக்கவுண்டுகளை ஃப்ரீஸ் செய்து சீல் வைத்தது மத்திய குற்றப்பிரிவு. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன் ”நான் பள்ளி நடத்துகிறேன். என்னுடைய பள்ளியை நடத்துவதற்கு என்னிடம் லஞ்சம் வாங்கினார்கள். எங்கே வாங்கினார்கள்?எவ்வளவு வாங்கினார்கள்? எப்படி வாங்கினார்கள் என்று நான் கூறுவதற்கு தயாராக இருக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

பள்ளி கல்வித்துறையில் நடந்த லஞ்ச பின்னணியை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்த அவரது இந்த உரை இந்த மோசடி விவகாரத்திற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்தது. இதுவரை 250க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை, டிபிஐ வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் ஆவணங்கள் பறிமுதல், 177 தனியார் பள்ளிகளிடம் கோடிக்கணக்கில் சுருட்டப்பட்ட பணம் என விசாரணை புயல் சுழன்றடித்த போதே அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு நகர தொடங்கியது காவல் துறை.

Anbil Mahesh

பறிமுதல் செய்யப்பட்ட மடிகணினிகள், ஹார்ட் டிஸ்குகள், வாட்ப் உரையாடல்கள் மற்றும் சாட்சிகளின் பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலங்களை அலசி ஆராய்ந்தபோது அன்றைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷின் பெயர் பிரகாசமாக மிளிர்ந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அன்பில் மகேஷ் மீதும் ஊழல் எப்ஐஆர் பாய, புதன்கிழமை காலை 8 மணிக்கே ஏசி காயத்ரி, ஏசி செந்தில்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு மற்றும் குற்றப்பிரிவு படையினர் கதவை சாத்திக்கொண்டு உள்ளே சோதனையை தீவிரப்படுத்தினர்.

இதையும் படியுங்க  எதிர்க்கட்சிகளின் ஸ்கெட்ச் காலி! CM விஜய்யின் மாஸ் என்ட்ரி… அதிரும் கரூர் அரசியல்!"

விஷயம் காட்டுத்தீயாக பரவ திருச்சி தென்னூர் இல்லத்திற்கு பாய்ந்து வந்தார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. ஆனால் கேட்டை மறித்து நின்ற காவல்துறை ”அனுமதி இல்லை சார்” என நேருவை உள்ளே விடாமல் திருப்பி அனுப்பினர். வெளியே நின்றிருந்த நேரு மிதமிஞ்சிய கோபத்தில் செய்தியாளர்களிடம் பொரிந்து தள்ளினார். களத்தில் வீரியமாக வேலை செய்யும் எதிர்கட்சி தலைவர்களை முதலமைச்சர் விஜய் மிரட்டி பார்ப்பதாக சீறிய நேரு ”இதை சும்மா விடமாட்டோம்” என்றும் ”கோர்ட்டில் சட்டப்படி எதிர்கொண்டு நிரபராதி என நிரூபிப்போம்” என சவால் விடுத்தார்.

இந்த இடைத்தேர்தல் அல்ல யாரு திமுகாவில வந்து தீவிரமா கீழ மக்கள் மத்தியில பணியாற்றுகிறார்களோ அவர்களை எல்லாம் குறி வைத்து விஜயனுடைய அரசாங்கம் வந்து ரைடு மூலமாக ஒரு பயமுறுத்துகிற பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். திமுகவை பொறுத்தவரைக்கும் ரைடை எதிர்கொண்டு நீதிமன்றத்தின் மூலமாக சந்தித்து குற்றவாளி இல்லை என்று தீர்ப்பை வாங்கி வெளிய வருவோம். அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்றார்.

மற்றொரு புறம் அன்பில் மகேஷ் வீட்டின் முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் கொந்தளிப்போடு திரண்டதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. அவரது வீட்டின் நுழைவாயிலை பிடித்து கொண்டு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது வெளியே வந்த அன்பில் மகேஷ் தொண்டர்களை அமைதி காக்கும்படி கையசைத்து கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்க  திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு கார் வேண்டாம்… உதயநிதி Vs அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காரசார விவாதம்!
Republic Tamil

தற்போது பரிமுதல் செய்யப்பட்டுள்ள லேப்டாப்கள், ஃபைல்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்டமாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்படுவாரா? அல்லது வழக்கம் போல அரசியல் புயலடித்து ஓய்ந்து விடுமா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. எது எப்படியோ? சென்னை மற்றும் திருச்சியில் மத்திய குற்றப்பிரிவு நடத்திய இந்த ரைடு வேட்டை அடுத்து யாரையெல்லாம் சுழன்றடிக்க போகிறது? இன்னும் எத்தனை முக்கிய புள்ளிகள் இதில் சிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதனிடையே சென்னை, பசுமைவழி சாலையில் உள்ள அன்பில் மகேஷ் இல்லத்தில் நடைபெற்று வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் சோதனை நிறைவடைந்த நிலையில் அங்கிருந்து பல்வேறு முக்கிய டிஜிட்டல் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். முன்னதாக தி.நகர் அலுவலகத்தில் உள்ள குப்பை தொட்டியிலும், வீட்டின் வெளியே நின்ற அவரது காரையும் உள்ளே கொண்டு சென்றும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் குறித்து பேசிய அன்பில் மகேஷ் ”மடியில் கணமில்லை. சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்” என்றார்.

மேலும் போலீசாரின் விசாரணை மிரட்டும் வகையில் இல்லாமல் நீதியை நிலைநாட்டும் வகையில் இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர் அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago