Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

VS Babu

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வி.எஸ்.பாபுக்கு கடந்த 9ம் தேதி அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ குழுவினர் தீவிரமாக அவரை கண்காணித்து வந்தனர். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவர்களை நேரில் சென்று அமைச்சர்கள் விசாரித்து வந்தனர். மேலும் அவரது வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவியது. இந்நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 9ம் தேதி வி.எஸ்.பாபு மூச்சுத்திணறல் காரணமாக எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவக் குழுவினர் தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க  திமுக- அதிமுக ஒரே கட்சியாக வாய்ப்பு..! விஜயின் சுனாமி அலையால் தமிழக அரசியலில் பகீர் திருப்பம்..!

தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. மேலும் ரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவை இயல்பான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியான நிலையில் அனைத்திற்கும் மருத்துவமனை அறிக்கை முற்றுப்பு வைத்துள்ளது. மேலும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago