Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது இடைத்தேர்தல் காய்ச்சலால் அதிரத் தொடங்கியுள்ளது. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, திமுக, அதிமுக, தவெக ஆகிய பிரதான கட்சிகள் வேட்பாளர்களைக் களமிறக்கி தேர்தல் ஆட்டத்தை மிகவும் ஆக்ரோஷமாகத் தொடங்கிவிட்டன. ஆனால், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிப்பதற்கு முன்பாகவே, தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிக்குள்ளும், எதிர்கட்சிகளின் மூடிய கதவுகளுக்குப் பின்னாலும் நடந்துள்ள சுவாரசியமான அரசியல் காய்க நகர்த்தல்கள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக, திமுக, அதிமுக என வேட்பாளர்களை அறிவித்து ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர். சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சத்தியபாமா, மரகதம் இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்தவர்கள். அவர்களுக்கே மறுபடியும் தவெக சார்பில் சீட்டு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதில் முதல்வர் விஜய்க்கு சுத்தமாக உடன்பாடே இல்லையாம்.

Vijay

அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து அவர்களுக்கே திருப்பி சீட் கொடுத்தால் குதிரைபேரம் செய்துதான் ஆளை தூக்கினார்கள் என எதிர்கட்சிகள் சொல்கிற குற்றச்சாட்டுக்கு நாமே ஆமாம்சாமி போட்ட மாதிரி ஆகிவிடும். அதுமட்டுமில்லாமல் நீதிமன்றத்திலும் அதிமுக இதை வைத்து வழக்குப் போடும். அதற்குப் பதிலாக நாம் ஆளுங்கட்சியாக வருவோம் என தெரியாமலேயே ஆரம்பத்தில் இருந்தே நமக்காக உழைத்த நம் தவெக இரத்தத்தின் இரத்தங்களுக்கு சீட்டு கொடுத்தால் கட்சிக்குள் செம்ம கெத்தாக இருக்கும் என விஜய்க்கு ஒரு ரிப்போர்ட் போயிருக்கிறது.

இதையும் படியுங்க  ”யார பார்த்து புதுசுன்னு சொல்றீங்க?” - போட்டு தாக்கிய அமைச்சர் ஜெகதீஸ்வரி!

இந்த ரிப்போர்ட்டை பார்த்ததும் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா இருவரையும் கூப்பிட்ட விஜய் ”ஏங்க அதிமுகவில இருந்து வந்தவங்களுக்கு நம்ம கண்டிப்பா இந்த இடைத்தேர்தல்ல சீட்டு கொடுத்துதான் ஆகணுமா என்ன? என பொளேரென ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அவ்வளவுதான். இதை கேட்டதுமே செங்கோட்டையனும், ஆதவ் அர்ஜுனாவும் அப்படியே ஆடி போய் விட்டார்களாம்.

adhav

ஏனென்றால் உங்களை மறுபடியும் எம்எல்ஏ ஆக்குகிறோம் என ஆசை வார்த்தை சொல்லி கூட்டி வந்ததே இவர்கள்தானே. பிறகு முதல்வர் விஜயிடம்வி ழுந்து அடித்து ”ஐயயோ தலைவரே.. அவங்களுக்கு சீட்டு தர்றதா வாக்கு கொடுத்து கூட்டிட்டு வந்துட்டோம். இப்ப அவங்களை நிக்க வச்சாதான் அதிமுகவுல மேலும் சில சலசலப்பு எல்லாம் உருவாகி மத்தவங்களும் நம்ம பக்கம் வருவாங்க. நாமளும் சீக்கிரமா மெஜாரிட்டிய தொட்டுரலாம்” என கெஞ்சி கூத்தாடி இருக்கிறார்கள். அதன்பிறகே சமரசமான விஜய் இந்த விஷயத்துக்கு ஓகே சொன்னாராம்.

அதே நேரம் விஜய் என்ன யோசித்தாரோ அதையே வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் விஜயை வைச்சு செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி பிளான் போட்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் திமுக தலைவர்கள் சிலரிடமும் பேசிய எடப்பாடி ”நம்ம எல்லாத்துக்கும் பொது எதிரி அப்படின்னு பார்த்தா விஜய்தான்” என புதுசா ஒரு டீலையும் போட்டு இருக்கிறாராம்.

இதையும் படியுங்க  திமுகவிடம் கடன் வாங்கிய விஜய்.. இனி சந்தோஷமா இருக்க முடியாது..! கணக்கு போட்டு காத்திருக்கும் அறிவாலயம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 hours ago at 10 hours ago