Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, அனைத்து அரசு ஊழியர்களும் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

எரிபொருள் நுகர்வை குறைக்கும் நோக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் சேமிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், இதற்காக அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, டெல்லி அரசு அலுவலகங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை பின்பற்றும் என்றும், அதேபோல் தனியார் நிறுவனங்களும் அமைப்புகளும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த நடைமுறை முறையாக செயல்படுத்தப்படுவதை தொழிலாளர் துறை கண்காணிக்கும் எனவும் முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  மோடியை பாம்பாட்டியாக வரைந்த கார்ட்டூன் - உலகளவில் பெரும் சர்ச்சை
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago