“இடதுசாரிகளுக்கு அவசர அழைப்பு! ‘2029 பிரதமர் ராகுல் தான்’.. விஜய்யின் அதிரடி மாஸ்டர் பிளான் பின்னணி என்ன?”களமிறங்கிய ஸ்டாலின்.. ஆடிப் போன விஜய்.. மீண்டும் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு- நடந்தது என்ன?
தவெக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் 4 பேரும் அடுத்தடுத்து சிபிஐ கட்சியின் வீரபாண்டியன், சிபிஎம் சண்முகம், மதிமுக வைகோ என ஆதரவு கட்சிகளின் தலைவர்களை இன்று திடீரென சந்தித்து பேசினார்கள். விசிக தலைவர் திருமாவளவனையும் அடுத்து இந்த அமைச்சர்கள் குழு சந்தித்து பேச உள்ளனர்.
இது குறித்து சிபிஐ வீரபாண்டியன் கூறுகையில், “தவெக நிர்வாகிகளாகத்தான் அந்த 3 அமைச்சர்களும் சந்தித்தார்கள். இப்போது இருக்கிற அரசியல் நடப்பை பற்றி விவாதித்தோம். நாங்கள் தவெக கூட்டணியில் இல்லை.. ஆட்சிக்குதான் ஆதரவு தருகிறோம்” என்றார்.

இந்த சந்திப்புகள் குறித்து விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, “தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை ஜூலை 1-ம் தேதி சிஎம் விஜய் நடத்தினார். அன்றைய கூட்டத்தில் சிபிஐ, சிபிஎம் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அன்றைக்கு காலையில் முதல்வர் விஜய்யை சிபிஐ தலைவர்கள் சந்தித்து பேசிவிட்டு போனார்கள். இப்போது மறுபடியும் செப்டம்பர் 9-ம் தேதி தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்க இருக்கிறது. இந்த முறையாவது சிபிஐ, சிபிஎம் கட்சிகளை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என அமைச்சர்கள் குழு, இன்று அந்த கட்சி தலைவர்களை சந்தித்து பேசியிருக்கிறார்கள்” என்றனர்.
விஜய்யின் திடீர் மூவ் பின்னணி என்ன?
தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தை திடீரென முதல்வர் விஜய் எதற்கு கூட்டுகிறார் என விசாரித்தால் “2029-ல் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என பிரசாரம் செய்கிறது காங்கிரஸ். ஆனால் காங்கிரஸை கடுப்பேற்றும் வகையில 2029-ல் விஜய்தான் தவெக பிரசாரம் செய்கிறது. அதுவும் வடக்கே பொய் பொய்யா ரீல்ஸ் போட்டு விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என பிரசாரம் செய்கிறார்கள்.

இது காங்கிரஸ் மேலிடத்தை ரொம்பவே அப்செட் ஆக்கி விட்டது. அதனால்தான் மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார்கள். அந்தச் சந்திப்பில், “பிரதமர் வேட்பாளர் பற்றி எங்கள் சீனியர்கள் யாரும் பேசமாட்டார்கள். கட்சி நிர்வாகிகள் அப்படி பேசினாலும் பெருசுபடுத்தாதீர்கள்” என பட்டும் படாமலும் சொல்லி இருந்தார்.
இது காங்கிரஸுக்கு திருப்தி தரவில்லை. காங்கிரஸின் டெல்லி மேலிடம் குறிப்பாக ராகுல் காந்தி, “ஆஹா.. நாம தப்பு பண்ணிட்டோமோ? விஜய் ஆட்சிக்கு அமைக்க அவசரப்பட்டு ஆதரவு தந்துவிட்டோமோ” என சக தலைவர்களிடம் அதிருப்தியாக் பேசிக் கொண்டு இருக்கிறார்.
இந்த தகவல் ஸ்டாலினுக்கும் கிடைத்திருக்கிறது. ஸ்டாலினும், திமுக சீனியர் தலைவர்களிடம் ”காங்கிரஸ் என்ன மனநிலையில் இருக்கு?” என உன்னிப்பாக கவனியுங்கள். அப்டேட் பண்ணுங்கள் எனச் சொல்லி இருக்கிறார்.
இன்னொரு பக்கம், சிபிஐ-சிபிஎம் தலைவர்கள் ரொம்பவே விஜய் ஆட்சியை விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதுவும் சிபிஐ, சிபிஎம்-க்கு எதிராக தலைமை செயலாளர் சுற்றறிக்கை விட்ட விவகாரம் எல்லாம் ‘தோழர்களை’ இன்னமும் கொதிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
இதை எல்லாம் கணக்குப்போட்ட ஸ்டாலின், காங்கிரஸ்- விசிக- இடதுசாரி தலைவர்களை பற்றி இனிமேல் விமர்சனம் வைக்க வேண்டாம்.. ”நாமும் பேசினோம்.. அவங்களும் பேசினாங்க” என நிறுத்துங்கள் என கட்சி சீனியர்களிடம் சொல்லிட்டாராம். இதனால்தான் உதயநிதி சட்டசபையில் பேசும் போது, “திருமாவளவன் என் ஆசான்” என வெளிப்படையாகவே சொன்னாராம்..
ஸ்டாலினின் இந்த அதிரடியான மூவ்ஸ் எல்லாம் அப்படியே விஜய்க்கு சென்றதால், “ஆஹா திமுக இப்படி இறங்குதா?” என செக் வைக்கதான் தவெக கூட்டணி கட்சிகள் கூட்டணியை செப்டம்பர் 9-ம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் எப்படியாவது சிபிஐ, சிபிஎம் தலைவர்களை உட்கார வைத்து விடவேண்டும் என ரொம்பவே விஜய் தரப்பு தீவிரமாக இருக்கிறது. அதற்காகத்தான் இன்று 4 அமைச்சர்களும் சிபிஐ, சிபிஎம் தலைவர்களை நேரில சந்தித்து பேசி இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 9-ந் தேதி தவெக கூட்டணி கூட்டத்தில் என்ன பேசப் போகிறார்கள் என விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, “சிபிஐ, சிபிஎம் தலைவர்கள் ரொம்ப அழுத்தமா சொல்லிகிட்டு இருக்கிறது.. தவெக தலைவர்களை அமைச்சர்கள சட்டென தொடர்பு கொள்ள முடியவில்லை. பிரச்சனைகளை பேச முடியவில்லை என்பதுதான். அதற்காகவே ’தவெக கூட்டணி’க்கான ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்குவது பற்றி செப்டம்பர் 9ம்தேதி கூட்டத்தில் பேசி அறிவிப்பு வெளியிட உள்ளனர்.
அடுத்ததாக இந்த கூட்டணிக்கு ஒரு பெயர் வைப்பது பற்றி முடிவெடுப்பார்கள். ஏற்கனவே ”தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு” கூட்டணிக்கு பிரவீன் சக்கரவர்த்தி தானாக ஒரு பெயரை அறிவித்தார். அந்த மாதிரி ஒரு பெயரை ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள். முக்கியமாக இந்த கூட்டத்தில், பிரதமர் வேட்பாளர் விவகாரம் பற்றி சீரியசாக ஆலோசனை செய்வார்கள். 2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்கள்.
