Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

₹5,000 கோடி சவால் விடுத்திருக்கும் ஜி- ஸ்குயர் நிறுவனத்தின் இயக்குனர் ராமஜெயம் தொடர்பான விவகாரத்தில், தற்போது சில கார்ப்பரேட் லிங்க்ஸ் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களுக்கிடையே இருக்கும் தொடர்புகள் என்ன? யார் எந்த நிறுவனத்தில் இயக்குனர் அல்லது பார்ட்டனாரக இருக்கிறார்கள்? இந்த நிறுவனங்கள் ஒன்றோடொன்று எப்படி இணைகின்றன? என்பதுதான் தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்விகள்.

முதலில் ஜி-ஸ்கொயர் ரியால்டர்ஸ் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். மு.க.ஸ்டாலின் மருமகன் வேதமூர்த்தி சபரீசனின் நெருங்கிய நபரான அண்ணாநகர் மோகன் கார்த்திக் மேக்ஸ் ஸ்பேஸ் ரியால்டி எல்.எல்.பி நிறுவனத்தில் வேத மூர்த்தி சபரீசன் உடன் டெசிக்னேடட் பார்ட்னராக இருப்பதாக கார்பரேட் ரெகார்ட்ஸ்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.அடுத்ததாக டச் ஃபீல் டெக்னாலஜி எல்.எல்.பி. இந்த நிறுவனத்திலும் மோகன் கார்திக் மற்றும் சபரீசன் இருவரும் பார்ட்னர்ஸ்-ஆக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதோடு தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றொரு நிறுவனம் லூக் அப் மெர்ச்சென்டீஸ் எல்.எல்.பி. இதில் மோகன் கார்த்திக், சபரீசன் மற்றும் கார்த்திகேயன் சண்முக சுந்தரம் ஆகியோர் பார்ட்னர்ஸாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அதாவது, இந்த நிறுவனங்களின் பெயர்களை மட்டும் தனித்தனியாகப் பார்க்காமல், அதில் இடம்பெறும் இயக்குனர்கள் மற்றும் பார்ட்னர்ஸை வைத்து பார்க்கும்போது ஒரு கார்பரேட் கனெக்சன் இருப்பதாக இந்த ரெக்கார்டுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதையும் படியுங்க  "எங்கே உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சுப்பாருங்க..? விஜய்க்கு செக்.. தவெக-வை திணறடிக்கும் பெண் ஐஏஎஸ்..!

இன்னொரு முக்கியமான கார்ப்பரேட் லிங்க் இப்போது மற்றொரு நிறுவனத் தொடர்பை பார்ப்போம். லோட்டஸ் ஹரிஷோன் டெவலப்பர்ஸ் எல்.எல்.பி நிறுவனத்தில் தற்பொழுது 5000 கோடி சவால் விடுத்துள்ள ஜி ஸ்குயர் இயக்குனர் ராமஜெயம் மற்றும் ப்ரசாந்த் ரெட்டி தடிசனா ஆகியோர் பார்ட்னர்ஸாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அதே ப்ரசாந்த் ரெட்டி தடிசனா ,லோடஸ் பெவின் டெவெலப்பர்ஸ் எல்.எல்.பி நிறுவனத்தில் வேத மூர்த்டி ச்பரீசன் உடன் பார்ட்னர்ஸாக இருப்பதாக ரெக்கார்டுகள் தெரிவிக்கின்றன.

அதன்பிறகு லோடஸ் பெவின் டெவெலப்பர்ஸ் எல்.எல்.பி-ல் இருக்கும் சபரீசன்,, மேக்ஸ் ஸ்பேஸ் ரியால்டி எல்.எல்.பி நிறுவனத்தில் மோகன் கார்த்திக் உடன் இணைந்திருக்கிறார். இதனால் ஒரு ஜெயின் உருவாகிறது: அதாவது ராமஜெயாம், பிரசாந்த் ரெட்டி, சபரீசன், மோகன் கார்த்திக் “இந்த நிறுவனங்களுக்கிடையே எந்த தொடர்பும் இல்லை” என்று கூறப்படும் நிலையில், பப்ளிக் கார்ப்பரேட் ரெக்கார்ட்ஸில் காணப்படும் இந்த காமன் டைரக்டர் ஷிப் மற்றும் பார்னர் ஷிப் லிங்க்ஸ் குறித்து தெளிவான விளக்கம் என்ன? என்பதுதான் தற்போது எழும் கேள்வி.

இதையும் படியுங்க  பாஜக டூ அதிமுக.. இப்போ அங்கேயும் பாய் பாய்! கௌதமியின் அரசியல் மூவ்.. அடுத்து என்ன?

மேலும், இதோடு இந்த கார்ப்பரேட்ஸ் கனெக்சன் முடிந்துவிடவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ரிசித், ராமஜெயம், ஶ்ரிகலா, கீதா மோகன் என்ற மற்றொரு தொடர்பும் முன்வைக்கப்படுகிறது. இதில் இந்த நபர்கள் எந்தெந்த நிறுவனங்களில் இணைந்திருக்கிறார்கள், எந்த நிறுவனத்தில் யார் இயக்குனர்கள், யார் பார்ட்னர்ஸ்? எந்த நிறுவனங்களில் காமன் ஓனர் ஷிப் அல்லது பார்ட்னர் ஷிப் லிங்க்ஸ் இருக்கின்றன? என்கிற குறித்து விவாதம் எழுந்துள்ளது.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுதான். கார்ப்பரேட் ரெகார்ட்ஸில் ஒரே நிறுவனத்தில் இருப்பது அல்லது பல நிறுவனங்களில் பிஸினஸ் தொடர்பு வைத்திருப்பது மட்டும் தவறு என்று கூற முடியாது. ஆனால், ஒரு தரப்பில் “தொடர்பே இல்லை” என்று கூறப்பட்டால், அதற்கு மாறாக பப்ளிக் ரெக்கார்ட்ஸில் தெரியும் இந்த நிறுவனத் தொடர்புகளுக்கு என்ன விளக்கம் என்பது பொதுமக்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயமாகிறது.

அதனால், ₹5,000 கோடி சவால் விடுத்துள்ள ராமஜெயத்திடம் முன்வைக்கப்படும் கேள்வி: இந்த கார்ப்பரேட்ஸ் லிங்க்ஸ் குறித்து நீங்கள் என்ன விளக்கம் சொல்கிறீர்கள்? இந்த நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று எப்படி தொடர்புடையவை? இந்த தொடர்புகள் வெறும் பிஸினஸ் பார்ட்னர்ஷிப்ஸ் மட்டும்தானா? அல்லது இதற்கு பின்னால் வேறு ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா?

இதையும் படியுங்க  "நான் விஜய்யைப் பாராட்டவே இல்லை!" – உலகளவில் பரவிய வதந்தியால் முக்கிய வழக்கிலிருந்து விலகிய உச்சநீதிமன்ற நீதிபதி!

இதற்கான தெளிவான பதில் கிடைத்தால், இந்த விவகாரம் குறித்து பொதுமக்களுக்கும் முழுமையான புரிதல் கிடைக்கும். டாக்குமென்ட்ஸ் பப்ளிக் ஆக இருக்கின்றன. கார்ப்பரேட் ரெக்கார்ட்ஸ்-ல் நிறுவனங்களின் இயக்குனர்கள் மற்றும் பார்ட்னர்ஸ் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. எனவே, அந்த ரெக்கார்ட்ஸ்-ன் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிப்பார்களா? என்பதுதான் தற்போது கவனிக்க வேண்டிய விஷயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago