Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

“3 ஃபைல்கள் நீ அவிழு நானும் அவிழ்க்குறேன்.. இப்படிதான் ஜெயலலிதாவும் வாலாட்டிச்சு அப்பறம் உள்ள போச்சு.. நான் மோசமான ஆளு..” முதலமைச்சர் விஜய் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வேலூரில் திமுக கூட்டத்தில் பேசிய அவர், ”திமுகவைப் பார்த்து விஜய் சவால் விடுகிறார். சட்டசபையில் சொல்கிறார், 3 ஃபைல்கள் ரெடியாக இருக்கிறது.. டேபிளில் இருக்கிறது. நான் அவிழ்த்தால் என்ன ஆவது என்று சவால் விடுகிறார். உனக்கு அவிழ்கிறது தாண்டா வேலையே. நீ அவழு.. நானும் அவிழ்க்கிறேன்.

நான் நேரடியாகவே சொல்கிறேன். இந்த பூச்சாண்டி காட்டுகிற வேலையெல்லாம் வேண்டாம். இந்த விஜய் அவர் என் டேபிலிளே மீது மூன்று பைல்கள் இருக்கிறது என்கிறாரே. அது ஆடிட் தணிக்கை செய்யப்பட்டது. அந்த கட்சி காரனுக்கு என்ன விஷயம் தெரியும்? ஒரு எழவும் தெரியாதவன் தான் மந்திரியாக இருக்கிறான். எம்எல்ஏவாக இருக்கிறான்.

கதிர் ஆனந்துக்கு தெரியும். வருஷா வருஷம் பார்லிமெண்டிலேயே சிஏஜி என்று சொல்வார்கள். சிஏஜியின் ஆடிட் ஒரு வருஷமும் பார்லிமெண்டில் டேபிள் வைத்து பாஸ் பண்ணுவார்கள். அதே போல சட்டமன்றத்தில் சிஏஜி ரிப்போர்ட்டை வைப்பார்கள். அந்த சிஏஜி ரிப்போர்ட் தான் இந்த மூன்றும். இந்த மூன்று சிஏஜி ரிப்போர்ட்டிலும் எந்த காலத்திலும் எந்த சிஏஜி ரிப்போர்டும் அரசாங்கத்தை பாராட்டியே இருக்காது.

இதையும் படியுங்க  திமுக மட்டும் யோக்கியமா?... விஜயை சந்தித்த மறு விநாடியே டோட்டலாக மாறிய துரை வைகோ...!

இன்டர்னல் ஆடிட்டுக்கும், எக்ஸ்டர்னல் ஆடிட்டும் நடக்கும். அதற்கடுத்து மேலே இருந்து ஒரு அதிகாரி வந்து ஆடிட் செய்வார். ஆடிட்டர் அப்செக்ஷன் சொல்வார். ஒவ்வொரு கொஸ்டினுக்கும் அந்த அதிகாரி பதில் சொல்லி அந்த கொஸ்டினுக்கு பதிலை எழுதி ஆடிட் கிளோஸ் ஆகும். இது சாதாரண முனிசிபாலிட்டியில் இருந்து நகராட்சி கார்ப்பரேஷன் இலிருந்து அரசாங்கத்து வரை நடக்கக் கூடியது.

உடனே இந்த பத்திரிகைகள் எல்லாம், ஊடகங்கள் எல்லாம் மூன்று ஃபைல்கள் இருக்கிறது என்று எழுதுகின்றன. திருவொற்றியூர் கூட்டத்தில் நான் கூட தைரியமாக சொன்னேன். நீ அவிழு.. அந்த மூன்றை நான் அழைக்கிறேன். நான் மோசமான ஆளு. முதல் முதலாக ஜெயலலிதா இப்படித்தான் என்னிடம் வாலாட்டியது. அதன் விளைவு என்ன என்பதை அந்த அம்மா உயிரோடு இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இதே போல் தான் ஆணவமாக பேசினார். அன்னைக்கு ஜெயலலிதா பெரிய தப்பு ஒன்றும் செய்யவில்லை. டான்சி நிலத்தை வாங்கினார். அரசு நடத்தை வாங்க கூடாது. நான் டான்ஸ் நிலத்தை வாங்கியது தவறு என்று ஒரு அறிக்கை கொடுத்து இருந்தால் முடிந்திருக்கும். உடனே அந்த அம்மையார் திமுகவில் ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேடுகிறேன். எதிரிகளை காணவில்லை என்று சொன்னார் ஜெயலலிதா. ஒரே ஒரு கலைஞர் தான் வெற்றி பெற்றார். அவர் ராஜினாமா செய்தார்.

இதையும் படியுங்க  ராஜினாமா செய்த நிமிடங்களிலேயே TVK உறுப்பினர் அட்டை – அரசியல் அதிர்ச்சி!

பிறகு பருதி இளம்வழுதி, செல்வராஜ் எம்.எல்.ஏ ஆனார்கள். அந்த தைரியத்தில் இந்த அம்மா என்ன சொன்னது என்றால் டான்சி நிலத்தை நான் வாங்கினேன். வாங்கினால் என்ன தப்பு என்று கேட்டது. வாம்மா மாட்டினாயா நீ என்று சொல்லி போட்ட கேஸ் தான் சுப்ரீம் கோர்ட் வரை போய் அந்த அம்மா உள்ளே போச்சு. வாய்க்கொழுப்பு மட்டும் இருக்கக் கூடாது. எந்த கொழுப்பு வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த அம்மா உலக மகா தப்பு ஒன்னும் செய்யவில்லை. அன்னைக்கே அந்த இடம் வேண்டாம் என்று திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி இருந்தால் பிரச்சினை இருந்திருக்காது” என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago