Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

nurse

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்த இளம்பெண் கடத்தி, கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உடல் காட்டுக்குள் வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.

உடலைப் பார்த்து கதறிய கணவன், மருத்துவமனை வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை கூட்டியிருக்கிறது

யார் இந்த உத்திரா? ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (27). கட்டிடத் தொழிலாளி. இவரது உறவினர் மகள் உத்திரா (26). கடந்த ஓராண்டுக்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் நடந்தது. வாழ்க்கையைத் தேடி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பல்லகவுண்டம்பாளையத்தில் வாடகை வீடு பிடித்து குடியேறினர்.

ரஞ்சித்குமார் கட்டிட வேலைக்குச் செல்ல, உத்திரா அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியில் சேர்ந்தார். கனவுகளுடன் ஓடிக்கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் கடந்த 14-ம் தேதி கருமேகம் சூழ்ந்தது

14-ம் தேதி நடந்தது என்ன? வழக்கம்போல அன்று காலை மனைவியை மருத்துவமனையில் கொண்டுபோய் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றார் ரஞ்சித்குமார். இரவு அழைத்துச் செல்ல மருத்துவமனைக்கு வந்தபோது, ஊழியர்கள் சொன்ன பதில் அவரை அதிரவைத்தது… “உங்க மனைவி ஏற்கனவே வீட்டுக்குக் கிளம்பிட்டாங்க!”பதறியடித்து வீட்டுக்கு ஓடினார்.

இதையும் படியுங்க  Some staff try to take a few luggage that had been meant to be

வீட்டில் உத்திரா இல்லை. உறவினர்கள், தெரிந்தவர்கள் வீடுகள், மருத்துவமனையைச் சுற்றிய பகுதிகள் என எங்கு தேடியும் தகவல் இல்லை. நள்ளிரவில் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

விஜயமங்கலம் காட்டில் அதிர்ச்சி! இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள காட்டுப் பகுதியில் முட்புதருக்குள் இருந்து துர்நாற்றம் வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு நிர்வாண நிலையில், அழுகிய பெண் உடல் கிடந்தது. விசாரணையில் அது காணாமல்போன நர்ஸ் உத்திராவின் உடல் என்பது உறுதியானது.

உடலை மீட்ட போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ரஞ்சித்குமார்

மரக்கிளையில் தொங்க முயன்ற கணவன்!தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த ரஞ்சித்குமார், மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுதார். துக்கம் தாங்க முடியாமல், அங்கிருந்த மரக்கிளையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த போலீஸார் அவரைத் தடுத்து மீட்டனர்.

இதையும் படியுங்க  The sensations are intense, and only the most experienced

போலீஸ் விசாரணையில் முக்கிய கேள்விகள்: மருத்துவமனையில் இருந்து ‘வீட்டுக்குப் போய்விட்டார்’ என்று சொல்லப்பட்ட உத்திரா, எப்படி 40 கி.மீ தாண்டி விஜயமங்கலம் காட்டுக்குச் சென்றார்? மருத்துவமனையிலிருந்து கிளம்பியதாகச் சொல்லப்பட்ட நேரத்தில் அவருடன் இருந்தது யார்? சிசிடிவி காட்சிகள் என்ன சொல்கின்றன? கடத்தலா, பாலியல் வன்கொடுமையா? உடல் நிர்வாணமாகக் கிடந்ததன் பின்னணி என்ன? – பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீஸார் காத்திருக்கின்றனர்.

செல்போன் சிக்னல், கடைசியாகப் பேசிய நபர்கள் யார் யார் என்ற கோணத்தில் தனிப்படை விசாரணை தீவிரமடைந்துள்ளது.

தற்போது கிடைத்த தகவலின் படி உத்திரா பணிபுரிந்த மருத்துவனையில் உடன் பணியாற்றிய சரவணன் என்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

ஓராண்டுக்கு முன் திருமணம்… புது வாழ்க்கை… இப்போது கணவன் நிர்கதியாய்… உத்திராவுக்கு நேர்ந்த கொடூரத்துக்குக் காரணமான மர்ம நபர்கள் யார் என்ற கேள்வியுடன் ஊத்துக்குளியே பதற்றத்தில் உறைந்திருக்கிறது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago