Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tamil Nadu

தமிழ்நாடு இன்று தூங்கவில்லை. ஒவ்வொரு அம்மாவும் தன் மகளை அணைத்தபடி தவிக்கிறாள். ஒவ்வொரு அப்பாவும் வாசலையே வெறித்துப் பார்க்கிறார். காரணம்… கடந்த இரண்டு வாரங்களில் அடுத்தடுத்து நடந்த 4 சம்பவங்கள்.

ஒன்று கொடூரக் கொலை, இரண்டு மாயம், ஒன்று மயிரிழையில் தப்பிய மீட்பு. வாருங்கள்… இதயம் கனக்க கனக்க இந்த சம்பவங்களை பார்ப்போம்.

சம்பவம் 1: திருப்பூர் – புதரில் வீசப்பட்ட தேவதை! தேதி: அக்டோபர் முதல் வாரம், 2026பனியன் நகரம் என்று மார்தட்டும் திருப்பூர், இன்று ரத்தக்கறை படிந்த நகரம். அவள் பெயர் ருத்ரா. வெள்ளை சீருடையில் வலம் வந்த நர்ஸ். நோயாளிகளின் உயிர் காத்தவளின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் போனது தான் காலத்தின் கோலம். மருத்துவமனை முடிந்து வீடு திரும்பும் வழியில் மாயமானாள்.

பெற்றவர்கள் தேடாத இடமில்லை, காவல் நிலைய படிகள் தேய்ந்தன. 5-ம் நாள் வந்தது இடி செய்தி. பெருந்துறை சாலையோர புதருக்குள் நிர்வாண நிலையில் ஒரு பெண் சடலம் .ஓடிச் சென்று பார்த்த போலீசாருக்கே கைகள் நடுங்கின. “அய்யோ… என் மகளே” என்ற கதறலுடன் குடும்பத்தினர் அது ருத்ரா தான் என உறுதி செய்தனர். மர்ம நபர்கள் வழிமறித்து கடத்தி, கொடூரமாக கொலை செய்து வீசிச் சென்றிருக்கலாம் என்கிறது முதற்கட்ட விசாரணை.

இதையும் படியுங்க  தமிழ்நாட்டுக்கு ‘டபுள் ஷாக்’ கொடுத்த கேரளா & கர்நாடகா! எல்லையில் எழும் அணைச் சிக்கல்... முறியடிக்குமா தமிழகம்?

மஞ்சள் கயிறு கட்டி தடயவியல் நிபுணர்கள் தடயம் தேடுகிறார்கள். ஆனால் மனிதநேயத்தை தொலைத்த சமூகத்தில் நீதியை எங்கே தேடுவது? ஒரு நர்ஸுக்கே பட்டப்பகலில் பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண பெண்ணின் நிலை என்ன?

சம்பவம் 2: பிறந்தநாள் இரவில் மாயமான பிஞ்சு! தேதி: அக்டோபர் 17, 2026விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த இடி.பிறந்தநாள் கொண்டாடிய 6 வயது சிறுமி, இரவு அம்மா மடியில் தூங்கினாள். விடிந்து பார்த்தால் குழந்தையைக் காணவில்லை. இரவோடு இரவாக மாயமான மர்மம் கிராமத்தையே உறைய வைத்தது. ட்ரோன் கேமராவுடன் போலீஸ் களத்தில் இறங்கியது. வயல், தோப்பு, கிணறு என சல்லடை போட்டு தேடுகிறார்கள். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. குழந்தை தானாக செல்ல வாய்ப்பில்லை, கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரம். நேற்று கேக் வெட்டிய பிஞ்சுக் கைகள் எங்கே? “என் பொண்ணை கண்டுபிடிச்சு கொடுத்துடுங்க” என்ற தாயின் கதறல் கல்லையும் கரைய வைக்கிறது .

இதையும் படியுங்க  "நீட்டுக்கு முடிவுக்கட்டு! வீதியில் இறங்கிய மாணவர்கள்,  டெல்லி தடியடியால் ஸ்தம்பித்த தமிழகம்!"

சம்பவம் 3: விழுப்புரம் ஐயூர் – கட்டையை தூக்கிய காளி !தேதி: அக்டோபர் 18, 2026 இருள் சூழ்ந்த தமிழகத்தில் ஒரு நம்பிக்கைக் கீற்று… ஐயூர் கிராமத்தில் பூத்தது. வீட்டு வாசலில் விளையாடிய சிறுமியை வடமாநில இளைஞன் ஒருவன் வாயைப் பொத்தி தூக்கிச் செல்ல முயன்றான். சத்தம் கேட்டு ஓடி வந்த தாய், ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. விறகுக் கட்டையை எடுத்து அவனை சரமாரியாக அடித்து நொறுக்கினாள். தாயின் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தம்பியும் சேர்ந்து அவனை மடக்கிப் பிடித்து கயிற்றால் கட்டினர். போலீசார் வந்து அவனை அள்ளிச் சென்று போக்சோ வழக்கில் சிறையில் தள்ளினர். அந்த தாய் அன்று தாயல்ல… காளி! அவளின் துணிச்சல் தான் இன்று ஒவ்வொரு வீட்டுக்கும் பாடம்.

“பிள்ளைகளை பெத்தவங்க மட்டும் பாத்தா பத்தாது, ஊரே கண்ணும் கருத்துமா இருக்கணும்” என்கிறார்கள் ஐயூர் பெண்கள்.

சம்பவம் 4: ஸ்ரீபெரும்புதூர் – ‘மேலும் ஒரு சிறுமி மாயம்!’ தேதி: அக்டோபர் 19, 2026 அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பாட்டி வீட்டில் வசித்த 8 வயது சிறுமி, பெஸ்டி 2 நாட்களுக்கு முன் வெளியே சென்றவள் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்

இதையும் படியுங்க  #BREAKING யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... காவிரியில் தண்ணீர் திறந்தது கர்நாடகா...!!

செஞ்சி, ஐயூர் சம்பவங்களின் தொடர்ச்சியாக இது பார்க்கப்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

திட்டமிட்ட கடத்தல் கும்பல் உலா வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது .இறுதியாக ஒரு கேள்வி…ருத்ராவுக்கு நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நேரக்கூடாது. காணாமல் போன இரண்டு பிஞ்சுகளும் வீடு திரும்ப வேண்டும். ஐயூர் தாயின் வீரம் ஒவ்வொரு வீட்டிலும் வர வேண்டும். பெண் பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொரு குடும்பமும் இன்று அச்சத்தில் உறைந்திருக்கிறது.

காவல்துறை இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும், கடத்தல் கும்பல்களை வேரறுக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரல்.

இல்லையேல்… நாளை நம் வீட்டு வாசலிலும் இந்த அபாய மணி ஒலிக்கும்!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

59 minutes ago at 59 minutes ago