Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெய்ஜிங்கை சென்றடைந்த அதிபர் டிரம்பை விமான நிலையத்தில் சீன துணை அதிபர் ஹான் செங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, சீன ராணுவம் மற்றும் பொதுமக்கள் சார்பில் டிரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா சென்றடைந்த நிலையில், விரைவில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக அரசியலில் எதிரணிகளாகக் கருதப்படும் இந்த இரு அதிபர்களின் சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையே நீடித்து வரும் வர்த்தகப் போர் மற்றும் வரிவிதிப்பு தொடர்பான மோதல்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஈரான் போர், தைவானுக்கு அமெரிக்கா மேற்கொள்ளும் ஆயுத விற்பனை உள்ளிட்ட விவகாரங்களையும் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனா சென்றுள்ள டிரம்புடன், அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்களும் பயணம் செய்துள்ளனர்.

இதையும் படியுங்க  "கணவனை மீட்ட காதல்.. ஆனால் உயிர பறிக்கப் பார்த்த 'அந்த' ஒரு தவறு! பாம்பு கடித்தால் இந்த விபரீதத்தை மட்டும் செய்யாதீங்க!"

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago