Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Cudalore Meyor

கடந்த ஐந்தஆண்டு கால திமுக ஆட்சியில் அதிகாரத்தின் உச்சியில் உட்கார்ந்திருந்தவர்கள் உடன்பிறப்புகளான தொண்டர்களையும், வேர் போன்ற கட்சி நிர்வாகிகளையும் சுத்தமாக மதிக்காமல், கண்டுகொள்ளாமல் விட்டதன் பக்க விளைவுகள் இப்போது ஆட்சியையும் அதிகாரத்தையும் இழந்து தெருவுக்கு வந்ததற்கு பிறகு ஒவ்வொன்றாக வெடித்து சிதற ஆரம்பித்து இருக்கிறது.

செப்டம்பர் 22 ஆம் தேதி கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முதுநகர் பகுதியில் 18 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள் எல்லாம் படுஜோராக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த விஷயம் காதுக்கு வந்ததும் கடலூர் மாநகராட்சி திமுக மேயர் சுந்தரியும், அவரது கணவரும் மாநகர திமுக செயலாளருமான ராஜா. இப்போது இந்த மாநகர செயலாளர் என்கிற பவர்ஃபுல் பதவியை திமுக தலைமையை தூக்கி எறிந்து விட்டது. அதன் பிறகு கைக்கு சிக்கிய மூன்று கவுன்சிலர்களை மட்டும் உடன் சேர்த்துக் கொண்டு தன்னுடைய அதிகாரத்தை காட்டுவதற்காக ஸ்பாட்டுக்கு புயலாக பறந்து போயிருக்கிறார்கள்.

அங்கே சென்று நான் ”இந்த ஊரோட மேயர். எனக்கு தெரியாமல் என்னோட அப்ரூவல் இல்லாமல் எப்படி இந்த வேலை எல்லாம் நடக்கலாம். வேலை நடக்கற விஷயம் என் காதுக்கு வரலன்னா என்ன அர்த்தம்? யார் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு இந்த தூர் வரீங்க? முதல்ல வேலையை அப்படியே நிறுத்துங்க” என ஆளுங்கட்சி தோரணையி; அதிகாரிகளிடம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டு திரும்பி வந்திருக்கிறார்கள்.

அதன் பிறகு செப்டம்பர் 23 ஆம் தேதி காலையில 11 மணிக்கு தமிழரசன் அமுதவன், பிரசன்னா, விஜயலட்சுமி உட்பட ஒரு ஏழு கவுன்சிலர்களை கூட்டிக்கொண்டு மேயர் சுந்தரி, அவரது கணவர் ராஜா, மகன் பாலாஜி எல்லாரும் சேர்ந்து ”இன்னைக்கு நாங்க யாருன்னு காட்டுறோம் பார்” என கடலூர் மாநகராட்சி ஆபீஸுக்குள் நுழைந்து கமிஷனர் கிரஷன் குமாரை நேரில் பார்த்து பேச போயிருக்கிறார்கள். கடலூர் மாநகராட்சியில் மொத்தம் 29 திமுக கவுன்சிலர்கள் இருக்கிற நிலையில் மேயருக்கு ஆதரவாக கூட வந்தது வெறும் 10 கவுன்சிலர்கள் மட்டும்தான்.

இதையும் படியுங்க  "சீல் சரியில்லை.. மெஷின் பழுது!" - கொளத்தூர் EVM சோதனை.. கொளத்தூரில் மறுதேர்தல் வருமா?

ஒரு கட்டத்தில் அவர்களை உள்ளே கூப்பிட்டு கமிஷனர் கிருஷ்ணன் குமார் பேசி இருக்கிறார். ரொம்ப மரியாதை கொடுத்து ரொம்ப தன்மையாகத்தான் பேசி இருக்கிறார். அப்போது மேயர் சுந்தரி ஆவேசமாக எகிறிக்கொண்டு ”நான் மாநகராட்சியோட மேயர். என்ன ஒரு வார்த்தை கூட கேட்காம மாநகராட்சியில அம்புட்டு வேலையும் நடக்குது. என்ன கண்டுகொள்ளாம தன்னிச்சையா முடிவெடுக்க நீங்க யார்? இதெல்லாம் நான் எப்படி அலோவ் பண்ண முடியும்” என அதிகார தோரணையில் பொங்க, அதற்கு கமிஷனர் கிரிஷன் குமார் ரொம்ப கூலாக ”இல்லையே மேடம் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை. எல்லாமே உங்களுக்கு தகவல் சொல்லிட்டுதான் எல்லா வேலைகளும் நடக்குது. உங்ககிட்ட யாரும் சொல்லலையா? என அவர் கேட்க, அப்போது மேயரின் கணவர் ராஜா திடீரென கோபத்துடன் ”யோவ் கமிஷனர் என்னயா கதை விடுற? அப்படி எல்லாம் யாரும் என்கிட்ட வந்து சொல்லலையே” என டேபிளை தட்டி கமிஷனரை பார்த்து விரலை நீட்டி ரொம்ப ஆவேசமாக கேட்க உடனே அந்த ஐஏஎஸ் ஆபீசர் தன்னோட பொறுமையை இழந்து ”ஹலோ மிஸ்டர் யாருமா நீங்க? டேபிளை தட்டி பேசுறீங்க? எந்த அதிகாரத்துல ஆபீஸ்குள்ள வந்து இப்படி கத்துறீங்க? நீங்க என்ன இந்த மாநகராட்சியோட மேயரா இல்ல வார்டு மெம்பரா? உங்க ரவுடியிசத்த எல்லாம் இங்க என்கிட்ட காட்டாதீங்க. இந்த ஆபீஸ்ல சிசிடிவி கேமரா ஓடிட்டு இருக்கு. லிமிட் மீறி பேசாதீங்க. பார்த்து கவனமா பேசுங்க” என நச்சுன்னு முகத்தில் அடித்தாற்போல வார்னிங் கொடுத்து விட்டார்.

cudalore meyor

அதற்கு மேயரின் கணவர் ராஜா ”என்னது என்னையே யாருன்னு கேட்குறியா? யோவ் நான் திமுககாரன்யா. என்ன பார்த்து நீ எப்படி ரவுடின்னு சொல்லலாம்? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுய்யா? என சவுண்டை ஏற்ற, கூட வந்த கவுன்சிலர்களும் அதுக்கு சப்போர்ட் பண்ணி சவுண்ட் கொடுத்திருக்கிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் நிழல் மேயராக வலம் வந்துவிட்டு அத்தனை அதிகாரிகளையும் பொம்மை மாதிரி கைக்குள் வைத்து ஆட்டி வைத்த மேயரின் கணவர் ராஜா ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடம் இருந்து இப்படி ஒரு சம்பட்டி அடியை கேட்டதும் ”என்ன பார்த்து யாரு மேன்னு கேக்குறியா? என அதிர்ச்சியில் உரைந்து போயிருக்கிறார்.

இதையும் படியுங்க  ''கேவலம்.. இந்த கருமத்தை பார்க்கவா உயிரை மாய்த்து சுதந்திரம் வாங்கி குடுத்தாங்க..!?'' அணில்களின் ஆதங்கம்..!

அப்போது அங்கே நின்ற மேயரோட மகன் பாலாஜி அப்பா அவமானப்பட்டதை ஜீரணிக்க முடியாமல் கமிஷனரை பார்த்து ”நீங்க ஐஏஎஸ்னா என்ன வேணாலும் பண்ணுவீங்களா? அதிகார திமிர்ல பேசுறீங்களா? நீங்க என்ன கமிஷனரா இல்ல தவெக மெம்பரா? ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தட்டுற வேலையை இங்க வச்சுக்காதீங்க” என கண்டுபடி வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார். இதை கேட்ட கமிஷனர் அவரோட அப்பாவுக்கு கொடுத்த வார்னிங்கில் இரண்டு சேர்த்து அவருக்கும் கூட வந்த மற்ற கவுன்சிலருக்கும் கொடுத்திருக்கிறார்.

இதையெல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த காவலர்களிடம் ”இவங்கள முதல்ல வெளியில அனுப்புங்க” எனச் சொன்னதும் கடுப்பாகிப் போன மேயர் குடும்பமும், உடன் வந்தவர்களும் வெளியே வந்து மாநகராட்சி கேட் பக்கத்தில் சாலையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் இறங்கி விட்டார்கள். இந்த விஷயம் காட்டுத் தீயாக பரவி ஸ்பாட்டுக்கு வந்த டிஎஸ்பி, தமிழ் யூனியன் இன்ஸ்பெக்டர் இளவரசி இருவரும் மேயர் மற்றும் மேயரோட கணவரிடம் சென்று ”ஏங்க நீங்க ஒரு மாநகராட்சி மேயருங்க. ஒரு பொறுப்பான பதவியில் இருந்துகிட்டு நீங்களே இப்படி ரோட்ல உட்கார்ந்து சட்டம் ஒழுங்க சீர்குளைக்க கூடாது. பிரச்சனை பண்ணாம அமைதியா இடத்தை காலி பண்ணுங்க. பொதுமக்கள் போற வழியை மறிச்சு அராஜகம் பண்ணாதீங்க. இல்லன்னா உங்களை நாங்க அரெஸ்ட் பண்ண வேண்டி வரும்” என எச்சரித்து இருக்கிறார்கள்.

அப்படி சொல்லியும் அங்கிருந்து அவர்கள் நகர மறுத்து ”என்னது எங்க மேல கை வைப்பீங்களா? தைரியம் இருந்தா எங்களை அரெஸ்ட் பண்ணுங்க பாப்போம்” என சவால் விட. இன்னும் திமுக ஆட்சி நினைச்சிட்டு இருக்காங்க போல. இதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்க வேண்டியதே இல்லை. செஞ்சிட்டு சொல்லிட்டாலே போதும். இதுக்குதான்டா வெயிட் பண்ணிட்டு இருக்கோம்ங்கிற மாதிரி உடனே மேயர், மேயரோட கணவர் அவரட மகன் உட்பட போராட்டத்தில நின்ற அத்தனை பேரையும் போலீசார் அப்படியே வேனில் தூக்கிட்டு போய் ஒரு கல்யாண மண்டபத்தில் வைத்து பூட்டி வைத்து விட்டார்கள்.

இதையும் படியுங்க  எனக்கு இந்தப் பதவியே வேண்டாம்.. விஜய் எடுத்த விபரீத முடிவு… இதுக்கா சார் உங்களுக்கு ஓட்டுப்போட்டாங்க..! கெஞ்சும் அதிகாரிகள்..!

அப்போது கல்யாண மண்டபத்தில் விரக்தியின் விழிம்பில் உட்கார்ந்திருந்த மேயரின் கணவர் ராஜா ”என்ன கொடுமையா இது. நம்ம ஆட்சியில நம்ம எவ்வளவு கெத்தா சுத்திட்டு இருந்தோம். இப்ப ஒரு கமிஷனர் நம்மள பார்த்து கேள்வி கேட்கிறான். போலீஸ்காரன் குண்டு கெட்டா தூக்கிட்டு வந்த வந்து உள்ள போட்டு பூட்டுறான். அதைவிட கொடுமை நம்ம கட்சியில மொத்தம் 29 திமுக கவுன்சிலர்கள் இருக்காங்க. ஆனா வெறும் ஏழு பேர்தான் நம்ம கூட வந்திருக்காங்க” என தலை மேல் கையை வைத்து புலம்பி தள்ளி இருக்கிறார். கூடவே இருந்த ஒரு உடன்பிறப்பு மூஞ்சியில் அடித்த மாதிரி ”யோவ் இப்ப புலம்பி என்னையா பிரயோஜனம்? நம்ம அதிகாரத்தில் இருந்தப்ப கட்சி தொண்டனுக்கோ நிர்வாகிக்கோ எவனாச்சும் ஒருத்தனுக்காவது நல்லது செஞ்சிருந்தா ஐயயோ நம்ம மேயருக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்துருச்சே” என நம்ம பின்னாடி வந்து நின்னுருப்பான். எந்த மேட்டரா இருந்தாலும் என் வீட்டுக்கு தான் வரணும்னு சொல்லி யாரையும் மதிக்காம சுத்துனீங்கல்ல. நாம எவனுக்குமே ஒன்னும் செய்யலையே. அதனாலதான் இப்ப ஒருத்தனையும் நம்ம பின்னாடி காணோம்.

வார்டுக்கு வார்டுக்கு நாலு நிர்வாகின்னு வந்திருந்தா கூட இந்த இடத்துக்கு நூற்றுக்கு மேற்பட்டவங்க நம்ம பின்னாடி வந்து நின்றுருப்பானுங்க. இதுதான் கட்சியையும் தொண்டர்களையும் கண்டு கொள்ளாம விட்டதோட பலன். இப்ப அனுபவிங்க” என தோலை உரித்து தொங்க போடுகிற மாதிரி உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.

அதுமட்டுமில்ல செப்டம்பர் 23 ஆம் தேதி இரவு மேலிடத்து கிரீன் சிக்னலோடு மேயர் சுந்தரி கணவர் ராஜா, அவருடைய மகன் பாலாஜி இன்னும் சில கவுன்சிலர்கள் மேல் அதிரடியாக எப்ஐஆர் போடுங்கள் என தகவல் கசிஞ்சதும் அந்த கேம்பே இப்போது விரக்தியில் ஸ்தம்பித்து போயிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago