Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக ‘மக்கள் மேடை – மக்கள் இயக்கம்’ (Makkal Medai – Citizens’ Platform) என்ற புதிய தனி அமைப்பை இன்று தொடங்கியுள்ளார்.

தமிழ்நாட்டில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதற்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதற்கும் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடிமட்ட அளவிலிருந்து புதிய உள்ளூர் தலைவர்களைக் கண்டறிந்து, அவர்களை உருவாக்கி சமூகப் பணிகளில் ஈடுபடுத்துவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேலும், மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் இந்த இயக்கத்தில் இணைந்து செயல்படலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக பொதுமக்கள், இளைஞர்கள், அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற வல்லுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளிட்டோர் இந்த இயக்கத்தில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களது கருத்துகள், அனுபவங்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆக்கப்பூர்வமான தளமாக இந்த இயக்கம் செயல்படும் என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  திருமாவின் திமுக ட்ரம் கார்டு.. விசிக-வின் டபுள் கேம்..! கூட்டணிக்குள் வரும் பாமக..! தவெக எடுத்த அதிரடி முடிவு..!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago