அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ஒரு பக்கா கிரைம் மிஸ்டரி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூன் 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், திரிகுண், ஜான் விஜய், தேஜு அஸ்வினி மற்றும் அதுல்யா சந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதையின் மையமாக, ஒரு தொழிற்சாலையின் பொது மேலாளர் (General Manager) மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலை தொடர்பாக அங்கு பணிபுரியும் மெக்கானிக், உதவி மேலாளர், தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் புதிதாக வேலைக்குச் சேர்ந்த நபர் என நான்கு பேர் மீது சந்தேகம் எழுகிறது.
இந்த நால்வரில் உண்மையான குற்றவாளி யார்? கொலையின் பின்னணி என்ன? என்ற கேள்விகளை மையமாகக் கொண்டு, விறுவிறுப்பான திரைக்கதையுடன் படம் நகர்கிறது.
இப்படத்திற்கு ஆர்.எஸ். ராஜ் பிரதாப் பின்னணி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை என்.எஸ். உதயகுமார் கவனித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் அண்மையில் வெளியிட்ட டீசர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
விறுவிறுப்பான காட்சிகள், மர்மம் நிறைந்த கதைக்களம் மற்றும் நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பு ஆகியவற்றால் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே அதிக கவனத்தைப் பெற்று வருகிறது.
