Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிர திட்ட எனச் சொல்லி விட்டு, இப்போது அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் தான் எனச் சொல்லும்போது பாகுபாடு ஏற்படாதா? என சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் அருண் ராஜ், ” ஆட்சிக்கு வந்த பிறகு பிறக்கக்கூடிய அனைத்து குழந்தைகளுக்கும் என சொல்லி இருந்தார்கள். பாகுபாடு எல்லாம் நிச்சயம் ஏற்படாது. இந்த அளவுக்கு ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்திற்குள்ளேயே இந்த திட்டத்தை அமல்படுத்தி அரசாணை கொண்டு வந்து, அதற்கு தேவையான தங்க மோதிரத்தை கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

மக்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தோடு இருக்கிறார்கள். மற்ற திட்டங்கள் மாதிரி இல்லாமல் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டம். கண்டிப்பாக இந்த திட்டத்தை வருங்காலங்கள்ல மற்ற மாநிலங்களும் மற்ற நாடுகள் கூட ஒரு முன்னுதாரணமாக கருதி பின்பற்றக்கூடிய ஒரு வரலாற்று சிறப்பு மிக்க திட்டமாக நிறைய பேர் சொல்கிறார்கள், உண்மையிலேயே அண்ணன், தம்பி, ஒரு தாய்மாமனாக இருந்தால் அந்த உணர்ச்சியை வார்த்தைகளால்நிச்சயம் விவரிக்கவே முடியாது.

இதையும் படியுங்க  "நான் விஜய் சேதுபதிக்கு ஜோசியம் பார்த்தேன்.. அவருக்கு நேரம் சரியில்ல!" - தவெக MLA கனிமொழி 'Astro' வார்னிங்!

அனைத்து இந்த தாய்மார்களுக்கும்ம் சொந்த அண்ணனாகதான் பாத்தார்கள். சொந்த குடும்ப உறுப்பினராகத்தான் விஜயை பார்த்தார்கள். அந்த குழந்தையை அவர் கையில ஏந்த வேண்டும் என்பது தான் ஒரு தாய்மாமனாக உளப்பூர்வமாக நிகழ்ச்சியான தருணமாக தான் இருந்தது. உண்மையிலேயே அது வார்த்தையால் விவரிக்கவே முடியாது.

ஒவ்வொருத்தருக்கும் தனியாக அவங்களது அடையாள எண்களோடு மோதிரம் போட்டு கொடுப்போம். பிறந்த மூன்று நாள் நான்கு நாட்களில் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்வார்கள். மோதிரம் கிடைத்து விடும், எந்த மோதிரமும் இன்னொரு குழந்தைக்கு போகாது” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago