Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

bussy anand

நடந்து முடிந்த தேர்தலில் நடிகர் விஜயின் செல்வாக்கும், மக்கள் மாற்றத்தை தீவிரமாக விரும்பியதும் தவெகவை ஆட்சிப் பீடத்தில் அமரச் செய்துள்ளன. ஆனால், தேர்தல் வெற்றியைக் கடந்தும் அதிமுக, திமுக போல் கட்சிக்குள்ளும், அடிமட்டத்திலும் பலமான பூத் கமிட்டியோ அல்லது வலுவான மாவட்ட அமைப்போ இன்னமும் முழுமையாக உருவாகவில்லை என்பதே யதார்த்தமான களநிலவரமாக உள்ளது. இந்தச் சூழலில் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்த வேண்டிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், தலைமை நிர்வாகிகளும் அதுகுறித்த எந்தவொரு தீவிர நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மாற்றுக்கட்சி விஐபிக்களுக்கு ஏமாற்றம்
இன்றைய அரசியல் நிலவரப்படி, பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவில் உள்ள அதிருப்தி மூத்த நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் பலமிக்க ஒன்றிய செயலாளர்கள் எனப் பலரும் தவெகவை நோக்கி வரத் தயார் நிலையில் காத்துக்கிடக்கின்றனர். ஆனால், அங்கே புஸ்ஸி ஆனந்த் சில சுயநல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

bussy anand
Bussy anand

மற்ற கட்சிகளில் இருந்து அரசியல் அனுபவம் வாய்ந்த பெரிய தலைவர்கள் உள்ளே வந்தால், தலைமைக்கு அருகில் தனக்குரிய முதலிடமும் ஆதிக்கமும் பறிபோய்விடும் என்ற பயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மாற்றுக்கட்சியினரை உள்ளே விடாமல் தட்டிக்கழிப்பது, “தலைவருக்கு இப்போது நேரம் இல்லை, பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று மழுப்பி விரட்டுவது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அப்படி மீறி கஷ்டப்பட்டு உள்ளே வருபவர்களுக்கும் கட்சியில் எந்தப் பொறுப்புகளும் வழங்கப்படுவதில்லை. உள்ளூர் மாவட்டச் செயலாளர்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகும் விஐபிக்கள் வேறு திசைகளுக்குத் தாவத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படியுங்க  2029 பிரதமர் விஜய்..? தவெக-வின் ரகசிய திட்டம் லீக்: கதறும் காங்கிரஸ், அதிரும் திமுக!

ஜெயலலிதா பாணியில் ‘கெத்து’ ஐடியா
முன்பெல்லாம் வாரம்ததோறும் சனிக்கிழமைகளில் மாற்றுக்கட்சிகளில் இருந்து வரும் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து சால்வை அணிந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு முதல்வர் விஜய் தயாராகவே இருந்தார். ஆனால், கட்சி நிர்வாகிகளின் கருத்துப்படி, புஸ்ஸி ஆனந்த் தொடர்ந்து விஜய் வசம் கூறி அவரது மூளையைக் கலைத்து வருவதாகத் தெரிகிறது.

“நீங்கள் சாதாரண ஆளில்லை தலைவரே, தமிழ்நாட்டின் முதலமைச்சர். மாற்றுக்கட்சியில் இருந்து வரும் லோக்கல் ஆளுங்களுக்கு எல்லாம் நீங்களே நேரில் வந்து சால்வை கொடுத்தால் உங்களது மாஸ் கெத்து குறைந்துவிடும். ஜெயலலிதா அம்மாவின் பாணியைப் பாருங்கள். எட்டாத உயரத்தில் இரும்புத் திரைக்குப் பின்னால் தன்னை வைத்துக்கொண்டதுதான் அந்த கெத்திற்குக் காரணம். யாரைப் பார்ப்பது, பேசுவது என்பதை என்னிடம் விட்டுவிடுங்கள்” என்று புஸ்ஸி ஆனந்த் ஒரு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்துள்ளார். இதையே நம்பிய விஜயும் சனிக்கிழமை சந்திப்புகளை ரத்து செய்துவிட்டு ஒதுங்கத் தொடங்கிவிட்டதாகக் கட்சிக்குள்ளேயே பலத்த பேச்சுகள் அடிபடுகின்றன.

VIJAY

புஸ்ஸி ஆனந்தின் அதிகாரப் பாதுகாப்பு
இதன் பின்னணியில் உள்ள அசல் ரகசியம் என்னவென்றால், திமுக, அதிமுகவில் இருந்து பலமிக்க முன்னாள் அமைச்சர்களும் அனுபவமிக்க மாவட்டச் செயலாளர்களும் தவெகவிற்குள் வந்தால், அவர்கள் நேரடியாக விஜயைச் சந்தித்துப் பேசிவிடுவார்கள். அப்படி அவர்கள் உள்ளே நுழைந்தால், அவர்களின் அரசியல் அனுபவத்திற்கு முன் புஸ்ஸி ஆனந்தின் அதிகாரம் எடுபடாமல் போய்விடும். தன்னைச் சுற்றியுள்ள அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற பயம்தான் இதற்குக் காரணம் என்று எதிர்க்கும் நிர்வாகிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படியுங்க  ஃப்யூஸை பிடுங்கும் அதிகாரிகள்..! விஜய் அரசைத் தாறுமாறாகக் கிழித்தெடுத்த மின் ஊழியர்கள்!

“தலைவருக்குத்தான் வேல்யூ வேண்டும்” என்று கூறிக்கொண்டே, விஜயை ஒரு கூண்டுக்குள் அடைத்து, மாற்றுக்கட்சி விஐபிக்களை உள்ளே விடாமல் தடுத்து, தனது சொந்த அதிகாரத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள புஸ்ஸி ஆனந்த் காய் நகர்த்தி வருவதாகக் கட்சிக்குள் சில முக்கிய அதிருப்தி நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த உட்கட்சிச் சிக்கல்கள் தவெகவின் எதிர்கால வளர்ச்சிக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago