Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சி.ஜே.பி. (CJP) மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மறைந்த மாணவி எஸ். அனிதாவின் அண்ணன் எஸ். மணிரத்தினம் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். இந்தப் போராட்டம், அனிதா உயிரிழந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்குக் கிடைத்த முதல் வெற்றி என்றும், நீட் தேர்வு விரைவில் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Republic Tamil

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மணிரத்தினம், நீட் தேர்வு ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, பொருளாதார ரீதியாக நலிந்த மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்றும், அந்தத் தேர்வு தனது குடும்பத்தையே சிதைத்துவிட்டதாகவும் வேதனையுடன் கூறினார்.

மேலும், கல்வி அமைச்சர் மாற்றப்படுவது மட்டுமே தீர்வாக இருக்காது என்றும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே நிரந்தரத் தீர்வு என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தப் போராட்டம் தற்போது தமிழ்நாட்டைத் தாண்டி நாடு முழுவதும் பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்க  நீட்: அமைச்சர் ஆதரிக்கிறார்… அரசு தடுக்கிறது.! இதென்ன தவெகவின் இரட்டை நிலைப்பாடு..? அன்புமணி ஆதங்கம்..! 

கல்வி அமைச்சரின் ராஜினாமா என்பது ஒரு “சிறிய நடவடிக்கை” மட்டுமே என்று தெரிவித்த மணிரத்தினம், உண்மையான நீதி கிடைக்க வேண்டுமெனில் நீட் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Republic Tamil

மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால், 2017-ஆம் ஆண்டு மருத்துவ இடம் கிடைக்காத வேதனையில் தற்கொலை செய்துகொண்ட தமிழக மாணவி எஸ். அனிதாவின் மரணம், தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த எதிர்ப்பு அனிதாவைப் போன்ற மாணவர்களிடமிருந்துதான் தொடங்கியது என்றும் மணிரத்தினம் கூறினார்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான அனிதா, 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ்-2 மாநிலப் பொதுத் தேர்வில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பிற்கான அவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.75 ஆக இருந்தது. இருப்பினும், மருத்துவச் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்திருந்த அவரால் மருத்துவ இடத்தைப் பெற முடியவில்லை.

இதையும் படியுங்க  "டெல்லிக்குக் கொடுத்த கெடு முடிந்தது… "எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் வருமா? அல்லது மீண்டும் ஒரு ஜந்தர் மந்தர் முற்றுகையா!
Republic Tamil

இதையடுத்து, தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்களில் ஒருவராக அனிதா வழக்குத் தொடர்ந்தார். ஆனால், தமிழக அரசு கோரிய விலக்கை உச்ச நீதிமன்றம் வழங்காததைத் தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி அரியலூரில் உள்ள தனது வீட்டில் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாகவும் மாறியது.

தனது சகோதரியின் வாழ்க்கைப் பயணத்தை நினைவுகூர்ந்த மணிரத்தினம், “அனிதாவுக்கு ஏழு வயதாக இருந்தபோதே எங்கள் தாயார் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு தினக்கூலித் தொழிலாளியான எங்கள் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். தாயின் மரணமே அனிதாவை மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் வளரச் செய்தது. அந்தக் கனவை நீட் தேர்வு சிதைத்துவிட்டது. எங்கள் குடும்பத்தையே அது அழித்துவிட்டது,” என்று உருக்கமாகக் கூறினார்.

இதையும் படியுங்க  “75 வயது தந்தையின் கொடூர வெறியாட்டம்! சொத்து தகராறில் அரிவாளுடன் தாக்குதல்”

மேலும், “எங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும். நீட் தேர்வைத் தடை செய்ய வேண்டும். நீட் தேர்வு விளிம்புநிலை, பொருளாதார ரீதியாக நலிந்த மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்,” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago