Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

vijay stalin

தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான தவெகவுக்கு இது ஒரு பிரஸ்டீஜ் போட்டி மட்டும் கிடையாது. சட்டமன்றத்தில் அவர்களது எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமாயின் அவர்களுக்கு இந்த வெற்றி மிக முக்கியமானது. மறு பக்கம் எதிர்கட்சியினர் இழந்த மதிப்பை மீட்க வேண்டும். எப்படியாவது இழந்த செல்வாக்கு இன்னும் இருக்கிறது என நிரூபிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் ஒரு பக்கம் காய் நகர்த்துகிறது. திமுக ஒரு பக்கம் மும்மரம் காட்டுகிறது. அதிமுக இன்னொரு பக்கம் அலைமோதுகிறது. அதிமுகவுக்கு இது ஒரு மிக முக்கியமான போட்டி. ஏனென்றால் அதிமுகவை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் அவர்கள் ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள்.

Maragatham Kumaravel

அப்படி ஒரு தொகுதிதான் தாராபுரம் சட்டமன்ற தொகுதி. இங்கு அதிமுக, திமுக இருவருமே செல்வாக்கு வாய்ந்த கட்சிகள். மதுராந்தகம் தொகுதிபோல் அல்லாமல் தாராபுரம் கொஞ்சம் வித்தியாசமான தொகுதி எனச் சொல்லலாம். 2026 நடந்த சட்டமன்ற தேர்தலில் சத்தியபாமா வெற்றி பெற்றிருந்தார். அதிமுகவை சேர்ந்த அவர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளார். அவர் 8,1000 வாக்குகள் பெற்றிருந்தார். இரண்டாவது இடம் இங்கு தவெகவுக்கு கிடையாது. திமுக தான் இரண்டாவது இடம் வாங்கியது. தவெக மூன்றாவது இடத்துக்கு இந்த தொகுதியில் தள்ளப்பட்டிருந்தது. அதிமுகவுக்கும், திமுகவுக்கும் வாக்கு வித்தியாசம் எனப் பார்க்கும்போது 16,727 வாக்குகள் வித்தியாசம். தவெகவுக்கு இங்கு ஒரு கடுமையான போட்டி இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்க  “உட்கட்சி குழப்பம் உச்சம் – அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா!”

அதற்கு காரணம் அவர்களுக்கான ப்ளஸ் பாயிண்ட்ஸ் பார்க்கும்போது திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் தவெக கூட்டணியில் இருந்து இந்த தேர்தலை சந்திக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தனித்து களம் காண்கிறது. இன்னொரு பக்கம் தவெக இங்கு ஏற்கனவே 3ம் இடத்தில் இருந்தது. ஆனால் நம்பர் ஒன் இடத்துக்கு வந்து வெற்றி கனியை பறிக்க வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை எப்படியாவது மீண்டும் வெற்றி பெற மும்மரமா இருக்கிறது. தற்போது அதிமுகவை பொறுத்தவரை மக்கள் இப்போது எப்படி வாக்களிக்கப் போகிறார்கள்? இந்த 8,1000 வாக்குகள் வேட்பாளாருக்கா? அல்லது கட்சிக்கா? அல்லது இரண்டும் சேர்ந்ததா?

Stalin

அப்படி என்றால் இந்த முறை இதே வேட்பாளார் தவெக சார்பாக நிற்கிறார்கள். அப்படியானால் மக்கள் அந்த வேட்பாளரை ஆதரிக்க போகிறார்களா? அல்லது அதிமுகவுக்கு ஏற்கனவே இருக்கும் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்று வாக்களிக்க போகிறார்களா? திமுகவும் இங்கு ஒரு கணிசமான வாக்கு வங்கி வைத்திருக்கிறது. முந்தைய தேர்தல்களில் திமுகவும் இங்கு வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, திமுகவுக்கு இடையே போட்டி ரொம்ப கடுமையாக இருக்கும்.

இதையும் படியுங்க  “கட்சி தாவலை ஊக்குவிக்கிறதா தவெக? பி. சண்முகம் சரமாரி விமர்சனம்!”

இந்த தொகுதியை பொறுத்தவரை 2026ல் கள நிலவரம் எப்படி? 2021ல் எப்படி திமுகவுக்கு மக்கள் வாக்களித்து அவர்களுக்கு வாய்ப்பளித்திருப்பார்கள் எனப் பார்த்தால் திமுகவை பொறுத்தவரை கயல்விழி கிட்டத்தட்ட 8,9860 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பாஜக பெற்றிருந்தது. தற்போது மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன் அதிமுக- பாஜக செல்வாக்கில் அங்கே குறைவான வாக்குகளில் மட்டுமே தோல்வியை தழுவி இருந்தார். அப்படியே 2016 சட்டமன்ற தேர்தலை பார்க்கும்போது காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளித்து இருக்கிறார்கள்.

காளிமுத்து வெற்றி பெற்றிருக்கிறார், அவருக்கும் அதிமுக வேட்பாளருக்குமான வாக்கு வித்தியாசம் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம். அதற்கும் முன் 2011 தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளனர். பொன்னுசாமி வெற்றி பெற்றிருந்தார். அவருக்கும் திமுக வேட்பாளருக்குமான வாக்கு வித்தியாசம் சுமார் 15,000 வாக்குகள். அப்படியே இன்னொரு 2006 சட்டமன்ற தேர்தல். திமுகவுக்கு மக்கள் வாய்ப்பளித்தார்கள். பிரபாபதி வெற்றி பெற்றார். அவருக்கு அதிமுக வேட்பாளருக்குமான வாக்கு வித்தியாசம் சுமார் 4,700. இப்படியாக தாராபுரம் தொகுதியில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி செல்வாக்கை நிரூபித்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்க  "அடுத்து காவிரியில ஆய்வா..?" டெல்டா காயுது… தவெக விளம்பரம் செய்யுது! CM விஜய்யை வெளுத்து வாங்கிய கனிமொழி!
Republic Tamil

சென்ற தேர்தலில் தவெக மூன்றாவது இடம்பிடித்தது. மதுராந்தகம் தொகுதி அப்படி அல்ல. தவெக இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது. ஆனால் தாராபுரம் தேர்தலில் தவெக மூன்றாவது இடத்தை பெற்றிருந்தது. அந்த வகையில் பார்க்கும்போது வெற்றிக்கனி பறிப்பது எந்தஅளவுக்கு சவாலாக இருக்கும் என அந்த தொகுதி மக்கள் கூறுகின்றனர். மக்கள் ஆதரவு யாருக்கு? தவெகவுக்கா? அல்லது அதிமுகவுக்கா? அல்லது திமுகவுக்கா? என ரொம்பவே டஃப் போட்டி நிலவக்கூடிய தொகுதியாக தாராபுரம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago