Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததை அடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி மாற்றங்களுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் திமுக செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதில் திமுகவில் உள்ள மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தப்படும் என்றும், ஒருவருக்கு 2 முறை மட்டுமே மாவட்டச் செயலாளர்கள் பதவி கொடுக்கப்படும். மாநகர செயலாளர் பதவி இனி கிடையாது. குறிப்பாக அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு வயது வரம்பு 70ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அந்த பதவியில் உள்ள 13 மாவட்ட செயலாளர்கள் பதவிகளை இழக்கப்போகிறார்கள்.

பதவி இழக்கப்போகும் 13 மாவட்ட செயலாளர்கள் விவரம்

நெல்லை மேற்கு – ஆவுடையப்பன் (81), ராணிப்பேட்டை -ஆர்.காந்தி (80), விருதுநகர் – கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் (77), தேனி தெற்கு ராமகிருஷ்ணன் (77), ஈரோடு தெற்கு – முத்துசாமி (77), புதுக்கோட்டை தெற்கு ரகுபதி(76), திருவண்ணாமலை எ.வ.வேலு (75), சேலம் கிழக்கு எஸ்.ஆர்.சிவலிங்கம் (75), தூத்துக்குடி தெற்கு அனிதா ராதாகிருஷ்ணன் (74), தஞ்சை வடக்கு – சாக்கோட்டை அன்பழகன் (72), விழுப்புரம் வடக்கு செஞ்சி மஸ்தான் (71), காஞ்சிபுரம் தெற்கு – சுந்தர் (72), மதுரை மாநகர் கோ தளபதி(70) உள்ளிட்டவர்கள் உள்ளனர்.

இதையும் படியுங்க  "விஜய் வந்ததும் எழாத உதயநிதி!" சட்டசபையில் வெடித்த மோதல்... சபாநாயகர் சொன்ன 'அதிர்ச்சி' உண்மை!
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago