Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இன்ஸ்டாகிராம் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம். பல்லடத்தில் தாய் மகளை வெட்டி கொன்ற காதலன்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பச்சாபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மனைவி தனலட்சுமி. பனியன் தொழிலாளிகள். இவர்களது மகள் பூவரசி கல்லூரி படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணிக்கு சென்று வருகிறார்.

இன்று காலை பழனிச்சாமி வேலைக்கு சென்று இருந்த நிலையில் தனலட்சுமி,பூவரசி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்பொழுது வீட்டுக்குள் புகுந்த மரமநபர் தான் கொண்டு வந்திருந்த அறிவாலால் இருவரையும் சரமாரியமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தாய் மகள் இருவரும் உயிர் இழந்தனர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள்ளே வந்து பார்த்த பொழுது இனிவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.மேலும் அங்கு இருந்து தப்பிச்செல்ல முயன்ற நபரை பிடித்து வைத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் போலீசார் இருவரின் பிரேதங்களையும் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்க  பெற்றோரே மறக்காதீங்க! நாளை உங்கள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து!

மேலும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பிடித்து வைத்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய் என்பதும்,கடந்த ஐந்து வருடங்களாக பூவரசியும் இவரும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததும் தெரிய வந்தது.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் பூவரசி அவரது வீட்டிலேயே தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் பூவரசரின் தாயார் தனலட்சுமிக்கு இவரது இன்ஸ்டாகிராம் காதலும் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இதற்கு தெரிவித்த தனலட்சுமி பூவரசியை இனிமேல் அக்ஷய் உடன் பேசக்கூடாது எனவும் கண்டித்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து பூவரசியுடம் பலமுறை அக்ஷய் பேச முயன்ற பொழுதும் பூவரசி தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அக்‌ஷய் இன்று காலை பூவரசியின் வீட்டுக்கு வந்து தான் மறைத்து வைத்திருந்த அறிவாலால் பூவரசி மற்றும் அவரது தாயார் தனலட்சுமி இருவரையும் வெட்டி கொன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அக்ஷய் குமாரை கைது செய்த பல்லடம் காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து தாய் மற்றும் மகளை காதலனே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்க  இருளைப் போக்கச் சென்ற இடத்தில் பறிபோன உயிர்! மயிலாடுதுறையில் நிகழ்ந்த சோகம்;

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago