Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அரசியல் களத்தில் விஜய் ஒரு புதிய சகாப்தம் படைத்துள்ள வேளையில், திரைக்குப் பின்னால் அரங்கேறும் அதிகார மல்லுக்கட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 2021-2026 திமுக ஆட்சியில், நிர்வாகம் என்பது அமைச்சர்களின் கைகளைத் தாண்டி, சில குறிப்பிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் காலடியில் மண்டியிட்டுக் கிடந்ததை நாடறியும். குறிப்பாக, உதயச்சந்திரன் போன்ற அதிகாரிகள் ஒரு ‘நிழல் முதலமைச்சராகவே’ உருவெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் அதிகாரத்தைப் பறித்து, ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் தங்கள் விருப்பப்படி ஆட்டிப்படைத்தனர் என்ற குற்றச்சாட்டுகள் இன்று வரை தணியவில்லை.

இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்கர்கள் சிலர், ”திமுக ஆட்சியில் ஐஏஎஸ் அதிகாரிகளின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடியது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர் அடிபட்டது. சுமார் ₹1,020 கோடி அளவிலான டெண்டர்களை ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்குச் சாதகமாக முடித்துக் கொடுக்க, சில உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமைச்சர்களின் நெருங்கிய ஆதரவாளர்களுடன் இணைந்து அதிகாரிகள் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதையும் படியுங்க  “எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப்படை..? 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் – உதயநிதி சரமாரி கேள்வி!”

மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டது தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில், மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக, மணல் குவாரி முறைகேடு தொடர்பாகப் பல மாவட்ட ஆட்சியர்களுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது திமுக ஆட்சியில் நிர்வாக ரீதியாகப் பெரும் ஆதிக்கச் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திமுக ஆட்சியில் அமைச்சர்களை விட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக குற்றச்சட்டுகள் எழுந்தன. அமைச்சர்களை விடவும், மற்ற மூத்த அதிகாரிகளை விடவும் உதயச்சந்திரனுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், ஒரு “நிழல் முதல்வர்” போல அவர் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் குற்றம் சாட்டினர். சில திமுக ஐஏஎஸ் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளே கட்டளை என்றும், அமைச்சர்களின் அதிகாரம் குறைந்து வருவதாகவும் விமர்சனங்கள் உள்ளன.

திமுக ஆட்சியில் ஐஏஎஸ் அதிகாரிகள் கொள்கை முடிவுகளில் முக்கியப் பங்கு வகித்தாலும், அவர்கள் ஆளுங்கட்சியின் அரசியல் நோக்கங்களுக்குத் துணை போவதாக எதிர்க்கட்சிகளும், தவெகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. 2026 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் ஒரு பரபரப்பான புகார் அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்க  120 பெண்களை வேட்டையாடிய 'பொலி காளை 'காசி..! இனி விடிவு காலம் இல்லை..! ஐகோர்ட் அதிரடி..!

சில மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆளுங்கட்சியான திமுக-விற்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், மாற்றுக்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்குத் திட்டமிட்டு முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
குறிப்பிட்ட சில அதிகாரிகளின் பட்டியலைத் தயாரித்து, அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தவெக சார்பிலேயே தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அப்படி திமுகவுக்கு ஆதரவாக, சாதகமாக செயல்பட்ட அதிகாரிகள் ஆட்சி மாறிய உடன் விஜயை சந்தித்து முக்கிய பதவிகளை பெற பலமாக காய் நகர்த்தி வருகின்றனர்.

தி.மு.கவுக்கு அடிவருடிகளாக செயல்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளான

  1. உதயச்சந்திரன்,
  2. சித்திக்,
  3. செந்தில்குமார் (சுகாதார செயலாளர்)
  4. உமாநாத்
  5. சண்முகம்
  6. அனு ஜார்ஜ்
  7. ககன்தீப் சிங் பேடி
  8. முருகானந்தம்
  9. தீரஜ் குமார்
  10. செல்வராஜ்
  11. ⁠கார்த்திகேயன்
  12. கந்தசாமி
  13. மோகன்
  14. கலைசெல்வி மோகன்
  15. ஜி பிரகாஷ்
  16. ஷில்பா பிரபாகர்
  17. குமரகுருபரன்
  18. மதுசூதன் ரெட்டி
  19. பிரஜேந்திர நவ்னிட்
  20. சுப்ரியா சாஹு
  21. லக்ஷ்மி பிரியா
  22. அருண் ராய்
  23. அமுதா போன்றவர்கள் ஆட்சி மாறியவுடன் அடுத்த முதல்வராக பதவியேற்க இருக்கும் விஜயை எப்படியாவது சந்தித்து மீண்டும் பெரும் பதவிகளை பெற கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. உதயச்சந்திரனால் வீழ்ந்த உதயசூரியன் ஆட்சி. இனியாவது திருந்துவீர்களா? என திமுக நிர்வாகிகளே சுட்டிக்காட்டும் நிலையில் அதே அதிகாரிகளுக்கு ஆட்சி நிர்வாகத்தில் முக்கியத்துவம் அளித்தால் தவெக ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும். பொங்கி வந்த பானையை உடைப்பதற்கு சமம் என எச்சரிக்கிறார்கள்” என தவெகவின் நல்லாட்சியை ஆட்சியை விரும்பும் அரசியல் நோக்கர்கள்.
இதையும் படியுங்க  நிஜ 'அமரன்' மேஜர் முகுந்திற்கு தமிழக அரசின் ஆகச்சிறந்த மரியாதை! தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு பெயர் மாற்றம்!

விழித்துக் கொள்வாரா விஸ்வரூப நாயகன் விஜய்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago