https://republictn.com/

இனி புதிய நபர்களுடன் சாட் செய்ய உங்கள் மொபைல் நம்பரை வழங்க வேண்டிய அவசியமில்லை; அதற்குப் பதிலாக ‘யூசர் நேம்’ (Username) பயன்படுத்தினால் போதுமானது.

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் தனியுரிமையை (Privacy) மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

எனினும், வாட்ஸ்அப் கணக்கை உருவாக்குவதற்கு (Sign-up) எப்போதும் போல மொபைல் நம்பர் கட்டாயமாகவே தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம், தெரியாத நபர்களுக்கு அல்லது குழுக்களில் உங்கள் மொபைல் நம்பரை வெளிப்படுத்தாமல், வெறும் யூசர் நேம் மட்டும் வழங்கி சாட் செய்ய முடியும். இருப்பினும், ஏற்கனவே உங்கள் மொபைல் நம்பர் தெரிந்த நண்பர்களுக்கு இதில் எந்த மாற்றமும் இருக்காது.

இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) போன்ற தளங்களைப் போல, பயனர்கள் தங்களுக்கு தனித்துவமான யூசர் நேம் (உதாரணமாக: @tamil_user) உருவாக்கிக் கொள்ள முடியும்.

வாட்ஸ்அப்பில் பொதுவான தேடல் பட்டியல் (Directory) எதுவும் இருக்காது. எனவே, உங்கள் முழுமையான யூசர் நேம் தெரிந்தால் மட்டுமே மற்றவர்கள் உங்களைத் தேடி கண்டுபிடிக்க முடியும்.

கூடுதல் பாதுகாப்பிற்காக, ஒரு பின் நம்பரையும் (PIN) அமைக்க முடியும். அந்த பின் நம்பர் தெரிந்தால் மட்டுமே புதிய நபர்கள் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் யூசர் நேமை ரிசர்வ் செய்வது எப்படி என்றால், உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இருப்பதால், விருப்பமான பெயரை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

இதற்காக, வாட்ஸ்அப் செயலியைத் திறந்து Settings பகுதிக்குச் செல்ல வேண்டும். பின்னர் Account என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அங்கு Username என்ற விருப்பம் இருக்கும். (இந்த வசதி படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.)

அதில், உங்களுக்கு தேவையான தனித்துவமான பெயரை உள்ளிட்டு ரிசர்வ் செய்து கொள்ளலாம்

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago