Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட வடமாநில நபர், 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், குழந்தையின் உடல் பொன்னேரி சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விபின் மஞ்சு என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, விபின் மஞ்சுவை வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படியுங்க  ஆபத்து…! ஆபத்து…!! - அவசர அவசரமாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்…!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago