Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழக அரசியல் களம் தற்போது ‘திராவிட மாடல்’ மற்றும் ‘சோபா மாடல்’ என்ற இருவேறு கொள்கை மோதல்களால் உச்சகட்டப் பரப்பரப்பை எட்டியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் விஜய், தமிழகத்தின் பொருளாதார மற்றும் சமூகச் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசியிருந்தார்.

இதனைச் சுட்டிக்காட்டி, தற்போதைய த.வெ.க அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகம் கடனில் தத்தளிப்பதாகப் பொய்ப் பிரசாரம் செய்த விஜய், இன்று டெல்லிக்குச் சென்று வாசித்த சாதனைகள் அனைத்தும் கடந்த ஐந்து ஆண்டுகால தி.மு.க ஆட்சியின் உழைப்பு என்றும், அதற்குத் தற்போதைய அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டப் பார்க்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர், ”தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.

இதையும் படியுங்க  விஜய்யின் ‘டெல்லி டூர்’..! மோடிக்குக் காத்திருக்கும் டிமாண்ட்ஸ்!

இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது – இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் – பெண் கல்வி – பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.

இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு ‘நீட் மட்டும் தான் உலகமா?’ என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.

டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார். மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு.

இதையும் படியுங்க  திமுகவினர் சேர்களை தூக்கி அடிக்கும் அளவுக்கு நாஞ்சில் சம்பத் பேசியது என்ன? ராஜீவ் காந்தி கொடுத்த பரபர விளக்கம்!

பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி – மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க, எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago